திருநெல்வேலியின் தாமிரபரணி வரலாறு (14 of 53)

அரியநாயகிபுரம் அணைக்கட்டு
 
இந்த அணைக்கட்டு மூலம் கோடகன் கால்வாய் வழியாக 3000 ஏக்கர் குளத்து பாசனம் உட்பட 6000 ஏக்கர் பாசனமும் பயன்பெறுகிறது. இந்த அணைக்கு ஒரு பெயரும் கால்வாய்க்கு ஒரு பெயரும் வழங்குகிறது. இந்த அணைக்கட்டுக்கு அருகில் உள்ள அரியநாயகிபுரம் என்ற கிராமத்தின் பெயரால் வழங்கப்படுகிறது. இந்த கால்வாயை கன்னடியன் அணைக்கட்டை வெட்டிய கன்னடிய அந்தணன் வெட்டினான் என்று பெசுகிறார்கள்.
 
மற்றுமொரு தகவல் நாயக்கர் காலத்தில் தலைமுறை தலை முறையாக ஆண்ட நாயக்கர் தளபதி அரியநாயக முதலியார் காலத்தில் வெட்டப்பட்டது என்று ஒரு சாரரும் கூறி வருகின்றனர். இதில் எது உண்மை என்று சரியாக தெரியவில்லை. ஆனால் சங்கன் திரடு, கல்லூர், கோடக நல்லூர் ( இந்த ஊர் பெயரில் தான் கால்வாய் ஓடுகிறது) வழியாக திருநெல்வேலி புறநகர் பகுதியை இந்த கால்வாய் செழிப்பாக்குகிறது.
 
பழவூர் அணைக்கட்டு
 
இந்த அணைக்கட்டு மூலம் பாளையம் கால்வாய் வெட்டப்பட்டுள்ளது. இந்த கால்வாய் வழியாக 3,300 ஏக்கர் குளத்து பாசனம் உட்பட 9,500 ஏக்கர் மொத்த பாசன பரப்பும் பயன் பெறுகிறது. பழவூர் அணைக்கட்டு என்று பெயர் கொண்ட அணை ஒரு புறம் பழவூர் கிராமத்தினையும் மறுபுறம் செவல் கிராமத்தினையும் கொண்டுள்ளது. இந்த அணையில் மேலச்செவல் கிராமத்தில் இருந்து பாளையங்கால்வாய் கிளம்புகிறது.
 
இந்த கால்வாய் பச்சையாற்றினை தாண்டி தருவை, மேலப்பாளையம், பாளையங்கோட்டை போன்ற முக்கிய நகரங்கள் வழியாக தூத்துக்குடி மாவட்டம் வசவப்பபுரம் கிராமத்தில் உள்ள சாணான் குளம் வரை நீண்டு கிடக்கிறது. பாளையங்கோட்டை நகரின் மிக முக்கிய பகுதி வழியாக இந்த கால்வாய் வருகிறது. ஒரு காலத்தில் இந்த கால்வாய் பேணி பாதுகாக்கப்பட்டு நல்ல நிலையில் இருந்தது. ஆனால் தற்போது சாக்கடை வடிகாலாக மாறி விட்டது.
 
இந்த கால்வாய் பாளையக்காரர்கள் ஆண்ட காலத்தில் வெட்டப்பட்டதால் பாளையங்கால்வாய் என்று பெயர் பெற்றிருக்க வேண்டும் என்றும், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் வழியாக ஓடுவதால் இந்த பெயர் வந்தது என்றும் கருத்துக்கள் நிலவி வருகிறது. சுத்தமல்லி அணைக்கட்டு: இந்த அணைக்கட்டு மேலச்செவல் கிராமத்தில் திருநெல்வேலி கால்வாய் வழியாக 3885 குளத்து பாசனமும் 2525 ஏக்கர் நேரடி பாசனம் உட்பட மொத்தம் 6410 ஏக்கர் பயன் பெறுகிறது. இந்த அணைக்கட்டு திருநெல்வேலி பகுதியை செழிப்பாக்குகிறது.
 
மருதூர் அணைக்கட்டு
 
தூத்துக்குடி மாவட்டம் மருதூர் அணைக்கட்டில் நதியில் மிக முக்கிய அணைக்கட்டாகும். இந்த அணையில் மருதூர் கீழக்கால் வழியாக 4,815 ஏக்கர் குளத்து பாசனம் உட்பட 7,785 ஏக்கர் பயன்பெறுகிறது. மருதூர் மேலக் கால்வாய் 8,208 ஏக்கர் குளத்து பாசனம் உட்பட 12,762 ஏக்கர் பாசன பரப்பும் பயன்பெறுகிறது. இந்த காலவாய் சாத்தான்குளம் வறட்சி பகுதியில் வறட்சியை போக்க சடைனேரி கால்வாய் திட்டத்தினை தருகிறது.
 
திருவைகுண்டம் அணைக்கட்டு
 
திருவைகுண்டம் அணைக்கட்டு உள் பக்கத் தோற்றம் திருவைகுண்டம் அணைக்கட்டு வெள்ளையர்கள் காலத்தில் கட்டப்பட்ட அணைக்கட்டு. இந்த அணையில் இரண்டு கால்வாய் உள்ளது. அதில் ஒன்று வடகால்வாய் மற்றொன்று தென்கால்வாய். இதில் வடகால்வாய் மூலம் 9,511 ஏக்கர் குளத்து பாசனம் உட்பட 12,800 ஏக்கர் பயன்பெறுகிறது. தென்கால்வாய் வழியாக குளத்து பாசனம் 10,067 ஏக்கர் பாசன பரப்பு உட்பட 12,760 ஏக்கர் பாசன பரப்பு பயன்பெறுகிறது. பிசானம்: நெல்லை, தூத்துக்குழ மாவட்டத்தில் பயிரிடும் முக்கியமான பயிர் நெல் பயிராகும்.
 
இங்கு வாழை பயிர் 2-வது பெரிய விவசாயமாகும். கரும்பு, மஞ்சள் போன்றவையும் .இப்பகுதியில் விளைகிறது. தாமிரபரணி பாசன பரப்பில் 86 விழுக்காடு பரப்பு இரு போக பரப்பாகும். இங்கு பழந்தொழி சாகுபடி செய்யப்படும் போது அந்த வருடம் கார் சாகுபடி செய்ய உரிமையில்லை. அதாவது தொடர்ந்து 3 போகம் விளைந்த விவசாயிகளுக்கு கொஞ்சம் இடைவெளி கொடுக்கவும், மேலும் நிலங்களை தொடர்ந்து விவசாயத்துக்கு பண்படுத்தவும், மற்ற அணைகட்டு விவசாயிகள் முன்னுரிமை கொடுக்கும் வகையிலும் கார் சாகுபடிக்கு பழந்தொழி விவசாயிகளுக்கும் உரிமம் கொடுப்பதில்லை.
 
ஆனால் இயற்கை அன்னை மழையை அள்ளி கொடுத்தால். இந்த எல்லாம் விதிகளும் விலக்கு அளிக்கப்படும். பழந்தொழி பாசனம்: தாமிரபரணி ஆற்றின் கடைப்பகுதியிலுள்ள மருதூர் மற்றும் திருவைகுண்டம் அணைக்கட்டில் கீழுள்ள இருபோக பாசனப்பகுதியில் பழந்தொழி என்ற சிறப்பு சாகுபடி ஏப்ரல், மே மாதங்களில் காலந்தொட்டு நடைபெற்று வருகிறது. கோடை காலத்தில் பெய்யும் மழை நீரைக் கொண்டும் பாபநாசம் மின் நீர் தேக்கத்திலிருந்தும் மின் உற்பத்திக்கு எடுக்கப்பட்டு கழிக்கும் தண்ணீரைக் கொண்டும் பழந்தொழி சாகுபடி செய்யப்படுகிறது.
 
ஏப்ரல் மே மாதங்களில் தலைப்பகுதியிலுள்ள ஆறு அணைக்கட்டுகளில் கால்வாய்கள், பராமரிப்புக்காக அடைபட்டுவிடுவதால் தாமிரபரணி ஆற்றில் இக்காலத்தில் வரும் நீர் மேல்பகுதிக்கு தேவையில்லாததால் இதை விரையம் செய்யாது பயன்படுத்த பழந்தொழி சாகுபடி செய்யப்படுகிறது. இம்முறை சாகுபடி பாபநாசம் மின் நீர் தேக்கம் கட்டப்படுவதற்கு முன்பிருந்தே திருவைகுண்டம் கால்வாயின் கீழ் 8000 ஏக்கருக்கு குறைவான இருபோக பாசன நிலங்களில் பயிரிடும் பழக்கத்தில் உள்ளது. பாபநாசம் அணை கட்டப்பட்ட பின் 1943க்கு பிறகு ஆற்றில் அதிக அளவு நீர் நிரந்தரமாக வரப்பெற்றதால் பழந்தொழி சாகுபடியின் பரப்பு நல்ல மழை பெய்யும் வருடத்தில் 2700 ஏக்கராக அதிகரித்தது.
 
குறுகியகால பயிர்
 
தற்சமயம் பழந்தொழி சாகுபடி செய்யும் பரப்பு நாளுக்கு நாள் அதிகரித்ததால், இப்பரப்பு பின் பகுதிகளை தீர்மானிக்க அரசு ஆணை எண் 2012 பொ.ப.து. நாள் 12-11-69-ல் விதி முறை வரையறுக்கப்பட்டது. அதன்படி பழந்தொழி சாகுபடி பரப்பு பாபநாசம் நீர்த்தேக்க அளவு, நீர்தேக்க உள்வரும் அளவு இவைகள் கணக்கில் கொண்டும் அரசு ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறையின் படியும் பாசனப் பரப்பு தீர்மானிக்கப்படுகிறது. இக்காலத்தில் குறுகிய கால பயிரே பயிரிடப்படுகிறது


Favorite tags



Tirunelveli Business Directory