திருநெல்வேலியின் தாமிரபரணி வரலாறு (17 of 53)

மின்சாரம் தயாரிக்கும் இடம்

பொதிகை மலையில் மின்சாரம் தயார் செய்யும் நிலைகள் குறித்து இனி கூறலாம். இந்த இடத்தில் தண்ணீரை 2 பெரிய குழாய் மூலம் கொண்டு சென்று அதை ஒரு இடத்தில் 4 குழாய்களாக பிரித்து அந்த பிரிவினால் ஏற்படும் அழுத்த விசையைக் கொண்டே உருளையை சுழல விட்டு மின்சாரம் தயார் செய்கிறார்கள். இதற்கான குழாய் 12 அடி உயரம் கொண்டது. பாபநாசம் மலையில் இந்த மின்சாரம் தயாரிக்கும் பகுதி கடல் மட்டத்திலிருந்து 635 அடி உயரத்தில் உள்ளது.

மின்சாரம் சிரிப்பு நடிகரின் சந்தேகம்

செந்தில், சார் தண்ணீரில் கரன்ட் எடுக்கறீங்கலே. அப்போ அந்த மின் சக்தியால் தண்ணியோட தன்மை கலங்கலா மாறிடுது. இதனால் விவசாயத்துக்கு நன்மை எப்படி வரும். உதவி பொறியாளராக இருந்த ராம்ராஜ்: இந்த சந்தேகம் எல்லோர் மனதிலும் வருகிறது. ஆச்சரியத்தோடு எல்லோரும் இந்த கேள்வியை தான் கேட்கின்றனர். தண்ணீரின் விசை சக்தியால் தான் மின்சாரம் தயாரிக்கிறார்கள். ஆனால் தண்ணீர் கலங்கலாக வரும் காரணம்.

இயந்திரத்தில் தண்ணீர் பெரிய குழாயில் இருந்து சிறிய குழாய்க்கு பிரிக்கப்படும் போது கலங்கலாக வருகிறது. மற்றபடி இதில் எந்தவொரு சக்தியும் வீணாகுவது இல்லை என்று கூறிய போது செந்தில் தனக்குரிய பாணியில் சிரித்து விட்டு எப்படியோ கரன்ட் எடுக்க தண்ணீரை படாத பாடு படுத்தறீங்க என்றார். எள்ளிலும் சிறிய இலை என்ன இலையோ? பாபநாசத்தில மின்சாரம் தயாரிக்க தினமும் 2 அடி தண்ணீர் கீழ் அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது. கிராம வாசிகள் இந்த மின்சாரம் தயாரிப்பதால் விவசாயம் பாதிக்கிறது என்று நினைக்கிறார்கள்.

அது பற்றி இரண்டு கிராமவாசிகள் பேசிய வார்த்தைதான் இது. நம்ம வயக்காட்டில் ஒரு காலத்தில் 2 மேனி, 3 மேனி வரைக்கும் வெளைஞ்சிது. ஆனா இப்போ அரை மேனி கூட வெளைய மாட்டேங்குது. என்றார். ஒருவர் உடனே மற்றவர், பின்னே எப்படி வெளையும்? கரண்ட் தயாரிக்கறேன்னு சொல்லி தண்ணீல உள்ள சத்தப் பூறாம் உறிஞ்சி எடுத்திடுறாங்க.. பெறவு எங்க வெளையும்..... மேனி அடிக்கும்? என்று கேட்டார்.

செந்திலின் சந்தேகம் - கரண்ட் தயாரிப்பதால் சத்து குறைகிறதா? இந்த சந்தேகம் நடிகர் செந்திலுக்கும் வந்தது. ஒரு சமயம் குடமாடி என்னும் இடத்தில் ஆத்மா என்ற தமிழ் சினிமா படமாக்கப்பட்டது. இதற்காக நடிகர்கள் ராம்கி, நடிகை கவுதமி மற்றும் செந்தில், துணை நடிகர்கள் இங்கு வந்து தங்கி இருந்தார்கள்.


Favorite tags



Tirunelveli Business Directory