திருநெல்வேலியின் தாமிரபரணி வரலாறு (32 of 53)

பாபநாசத்தில் வயிராசலிங்கம் தோன்றிய வரலாறு
 
பாபநாசத்தில் பல விசேசம் உள்ளது. அதில் இருந்து ஒரு சிவ விவரத்தினை தொடர்வோம்...
 
விராட்டு
 
முக்காளலிங்க முனிவர் பாடிய 1039 தமிழ் பாடல்கள் கொண்ட பாபநாச தலப்புராணத்தில் இருந்து ஒரு சில புராணத்தினை இனி பார்ப்போம். முதலில் மும்மலைகள் சாபம் தீர்ந்த கதையை கூறுவோம். எண்ணற்ற அண்டங்களை ஏதோ ஒரு சக்தி தாங்கிக் கொண்டிருக்கிறது. அச்சக்தியை உருவகப்படுத்தி அதை விராட்டு என்று பண்டைய முனிவர்கள் பெயரிட்டனர்.
 
குறிப்பாக கெர்குலஸ், அட்லஸ் போன்ற சைக்கிள் விளம்பரங்களில் உள்ள எம்பளம் பூமியை கையில் தாங்கிக் கொண்டு இருப்பது போல் இருக்கும். அது போலத்தான் விராட்டு நமது அண்டத்தை தாங்கி நின்று கொண்டிருக்கிறது. பெரும்பாலும் ஒரு வேலை செய்தால் அதில் சலிப்பு தோன்றுமல்லவா? அது போல் விராட்டிற்கும் எப்போதும் அண்டத்தை சுமப்பது சலிப்பை ஏற்படுத்தியது. ஆகவே விராட்டு இறைவனை வேண்டி தவம் செய்தது.
 
சிவபெருமானை நோக்கி தவமிருந்த விராட்டுக்கு பெருமான் அடியும முடியும் தெரியாத ஜோதி வடிவில் தோன்றினார். விராட்டு அவரை தொழுது என்னை அண்டத்தை தாங்கும் பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டுமென்று கேட்டது. மேலும் தமக்கு முக்தியும் வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதற்கு பதில் அளித்த சிவபெருமான் நீ உன் வினைப் பயனாக பெற்ற வாழ்நாள் இன்னும் பல கோடி ஆண்டுகள் உள்ளன. அது முடிவுற்றவுடன் நீ முக்தி அடைவாய். அதுவரை நீ சிவபூஜை செய்து வா என்று அருளினார்.
 
சிவனே போற்றி
 
உடனே விராட்டு சிவபெருமானை நோக்கி, நான் தங்களை வணங்க ஏதுவாக எனக்கு நீர் எழுந்தருள வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. அதற்கு இணங்க இறைவனும் பாபநாசத் தலத்தில் ஒரு சுயம்பு வடிவத்தில் எழுந்தருளினார். அன்று முதல் முறையாக விராட்டு பக்தியுடன் இத்தலத்தில் உள்ள சிவனுக்கு பூஜை செய்து கொண்டிருக்கிறது என்பது ஐதீகம்.
 
மாசித் திங்கள்
 
இறைவன் விராட்டுக்குள் காட்சி கொடுத்த நாள் மாசித் திங்கள் சிவராத்திரியன்று. எனவே இந்த நாளில் பூஜை செய்து வழிபட்டு வருபவர்களுக்கு வேண்டிய வரம் தர வேண்டும் என்று விராட்டு கேட்டுக்கொண்டது. அதன்படி இறைவனும் மகிழ்ந்து இத்தலத்தில் மாசி சிவராத்திரி அன்று வழிபட்டோர் முக்தியடைவர் என்று அருளினார். இத்தலம் விராட்டு வழிபடும் தலமானதால் வயிராச தலமென்றும், இங்குள்ள லிங்கம் வயிராச லிங்கம் என்றும் பெயர் பெறும் என்று இறைவன் கூறினார்.
 
அனைத்து அண்டங்களையும் தாங்கி ஆளுபவானாக இருந்தாலும், அவன் ஆண்டியாக இருந்தாலும் முக்தி நிலையை பெற சிவபூஜை செய்தே ஆக வேண்டும். அது மட்டுமல்ல சிவபூஜைக்கு ஏற்ற இடம் இம்மண்ணுலகு தான். அதுவும் பாபநாசம் தான். அதனால் தான் தேவர்களும் இங்கு வந்து சிவபூஜை செய்து முக்தி அடைகின்றன. என்பது விராட்டு மூலம் நாம் அறியும் உண்மையாகும். மாணிக்கவாசக பெருமான் எழுதிய திருப்பள்ளி எழுச்சி என்றாலும் சரி, சேக்கிழார் எழுதிய பெரிய புராணமாக இருந்தாலும் சரி இந்த கருத்தையே கூறுகிறது.
 
வேதங்கள்
 
அதாவது உயிர்கள் தாம் செய்த நல்வினை தீவினைக்கு தக்கவாறு பிறந்து வாழ்ந்து மறையும். இந்த நியதியை இறைவன் அருளன்றி யாராலும் மாற்ற இயலாது. இது எல்லோருக்கும் தெரிந்த கதைதான். இது பற்றிய ஒரு சம்பத்தினைதான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம். பாபநாசத்தில் உள்ள வயிராச லிங்கத்தின் பெருமையை உணர்ந்த வேதங்கள் நான்கும் அங்கு பூஜை செய்ய விருப்பம் கொண்டது. அதர்வண வேதம், வான் போன்ற உருவம் கொண்டது. மற்ற வேதங்களாக ரிக் -யஜூர் சாம வேதங்கள் மூன்று காள மரங்கள் போன்று உருக்கொண்டன.
 
இந்த மரங்கள் வயிராசலிங்கத்திற்கு குடை பிடிப்பது போன்று அடர்ந்து வளர்ந்து நின்றன. அவை லிங்கத்தின் மேல் தேன் வடித்தும், மலர்கள் சொரிந்து பழங்களை உதிர்த்தும் , அமுது படைத்தும் லிங்கத்தை வணங்கி வழிபட்டு வந்தனர். வேதங்கள் 3களா மரங்களாக நின்று வழிபடும் ஈஸ்வரன் முக்களாலிங்க நாதர் என்றும் பழமறை நாயகன் என்றும் பாபநாச மூர்த்தி என்று பெயர் பெற்றார். இந்த 3 களாமரங்களை இன்றும் நாம் கோவில் வளாகத்தில் காணலாம்.


Favorite tags



Tirunelveli Business Directory