திருநெல்வேலியின் தாமிரபரணி வரலாறு (35 of 53)

இங்கிலீஷ் துரையின் கண்ணைப் பறித்த அம்மன்!
 
முன்பு சீவலப்பேரி பாலம் கட்டப்படும் போது அங்கு போடப்பட்டிருந்த தளவாட பொருட்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அதனால் அரசுக்கு பல இழப்பு ஏற்பட்டது. இந்த ஆற்று வெள்ளத்தில் பலர் கட்டு மரம் போட்டுக் கொண்டு வெள்ளத்தில் செல்லும் பொருட்களை மீட்டார்கள். அதில் ஒருவர் சுவர் கடிகாரம் ஒன்றை மீட்டுக் கொண்டு வந்தார்கள். சுமார் 50 வருடங்களுக்கு முன்னால் இதே போல் ஆற்ற வெள்ளத்தில் வந்த கடிகாரத்தினை என் தாத்தா எடுத்துள்ளார். அ
 
தை நான் பிறந்த முத்தாலங்குறிச்சி கிராமத்தில் எனது பூர்வீக வீட்டில் மாட்டி வைத்துள்ளார். அவர் மறைந்து 20 வருடத்திற்கு மேல் ஆகி விட்டது. ஆனாலும் அந்த கடிகாரம் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த கடிகாரத்தினை நான் பார்க்கும் போது எல்லாம் தாமிரபரணியில் அந்த காலத்தில் வந்த வெள்ளத்தின் நினைப்பே வரும்.
 
ஆனால் 1992க்கு பிறகு மிகப்பெரிய வெள்ளம் தாமிரபரணியில் வரவில்லை. காரணம். புதிதாக கட்டிய பாபநாசம் மேலணை ஆகும். ஆனால் இந்த மேலணையில் 10 நாள் மழை பெய்தாலே போதும் ஒரு போகத்தினை விளைய வைத்து விடலாம்.
 
அணைக்கட்டு
 
தற்சமயம் வெள்ளப்பெருக்கு குறைந்து விட்டது. 1992க்கு பிறகு புயல் வெள்ளத்தால் நமது தாமிரபரணியில் எந்த பாதிப்பும் இல்லை. தாமிரபரணியைப் பொறுத்த வரை திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டத்தில் பலகோடி ரூபாய் செலவில் கூட்டுக் குடிநீர் திட்டம் போட்டு ஆற்றுக் குடிநீர் கிடைக்காத ஊரே என்ற அளவுக்கு கொண்டு சென்றுள்ளனர்.
 
ஆகவே அணைக்கட்டில் தண்ணீர் குறைவாக இருந்தாலும் குடிதண்ணீர், மின்சாரம் போன்ற தேவைக்கு தாமிரபரணியின் தண்ணீர் தினமும் 2அடி தற்சமயம் பயன்படுகிறது. முதலில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்ட இந்த தாமிரபரணி குடிதண்ணீர், மினசாரத்திற்கு பயன்படுத்தவது அனைவருக்கும் தெரியும். இனி தெரியாத ஒன்றைப் பார்ப்போம்.
 
திரௌபதி கோவில்
 
வீரவநல்லூர் பத்ர காளியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் விளக்கு பூஜை கிருஷணன் செட்டியார் பாத்திர வியாபாரியான இவர் விளக்கு பூஜை செய்து வருவதால் விளக்கு பூஜை கிருஷணன் சாமி என்று அழைக்கப்படுகிறார். சேரன்மகாதேவி ஒன்றிய கிராம கோவில் பூசாரி சங்க அமைப்பாளராக பணியாற்றிவரும் இவரிடம் தாமிரபரணி நதிக்கரை அற்புதங்கள் பற்றி செய்தி திரட்டும் போது என்னுடனேயே வருவார்.
 
அந்தந்த கிராமத்தில் உள்ளமுக்கிய பிரமுகர்களை என்னிடம் அறிமுகம் செய்து, செய்தி திரட்ட ஏதுவாக இருப்பார். அவர் வீரவநல்லூர் திரௌபதி அம்மன் கோயிலில் தீ மிதி திருவிழாவில் கரக குமாராக கரகத்துடன் தீ மிதிப்பார். அந்த கோயிலில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அவர் என்னிடம் கூறியதை நான் தருகிறேன்.
 
ஒருசமயம் வீரவநல்லூரில் இருந்து தாமிரபரணி நதிக்கரையில் அரிகேசவநல்லூர் கிராமத்தில் தீர்த்தத்திற்கு தண்ணீர் எடுக்க செம்பு குடம் ஒன்றை எடுத்து சென்றார்கள். அப்போது அந்த செம்பு குடத்தில் திரவுபதி அம்மன் புகுந்து வீரவநல்லூர் வந்தடைந்தார். அந்த திரவுபதி அம்மன் கோவில் தீ மிதி திருவிழா தான் மிகவும் விசேஷம்.
 
இந்த விழா பற்றி கூறும் போது முதலில் கோவிலுக்கு திருவிழா ஆரம்பிக்கும் போது இந்த வருடம் பூக்குழி இறங்க வேண்டுமா? என்று அம்மனிடம் உத்தரவு கேட்டு எலுமிச்சை பழத்தை மேல் நோக்கி தூக்கி வீசுவார்கள். அந்த எலுமிச்சை பழம் பூமியில் நட்டப்பட்ட திரிசூலம் மீது விழுந்தால் பூக்குழி திருவிழா நடத்தப்படும். பூக்குழியில் பக்தர்கள் இறங்கும் முன்பு முதலாவதாக பசுமாடுதான் பூக்குழியில் இறங்கி செல்லும். பின்பு தான் பக்தர்கள் இறங்குவார்கள்.
 
இந்த கோவிலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பூக்குழி திருவிழா நடைபெறும் போது திடீரென்று மழை பெய்ததாம். அப்போது பூக்குழியும், பூக்குழி இறங்கும் பக்தர்கள் மீதும் மழை பெய்யவில்லையாம். ஆனால் பூக்குழியை காண வந்த பக்தர்களை மழை நனைத்து விட்டதாம். இந்த அற்பதமான அதிசயத்தை தமது வாழ்நாளில் கண்டு ஆனந்தப்படடவர் கிருஷணன் செட்டியார்.
 
இவர் மேலும் இக்கோவில் குறித்து கூறியதாவது.. .ஆங்கிலேயர் காலத்தில் கலெக்டர் துரை ஒருவர் பூக்குழி இறங்கும் பக்தர்களை தடுத்து நிறுத்தினாராம். உடனே ஆத்திரமடைந்த பக்தர்கள் நாங்கள் கண்டிப்பாக பூக்குழி இறங்கியே தீருவோம் என்று பூக்குழி இறங்க தயாரானார்கள். உடனே அந்த துரை அந்த பூக்குழியை அழிக்க திட்டம் போட்டு படை வீரர்களை ஏவிவிட்டான்.
 
அதே சமயம் அம்மன் அருளால் துரையின் கண் திடீரென்று பார்வையற்று போனது. தவறை உணர்ந்த வெள்ளைக்கார துரை ‘ஐயோ’ அம்மன் என்னை காப்பாற்று உனக்கு மண்டகப்படியை நானே செய்கிறேன் என்று கெஞ்சியுள்ளான். அதன்படி அம்மன் துரையின் கண்களை திறந்தாள். துரையும் 9-வது மண்டகப்படி செய்தான்.
 
துரையை தொடர்ந்து வெள்ளைக்கார ஆட்சி முடிந்த பின்பு தற்சமயம் அந்த மண்டகப்படியை போலீஸ்காரர்கள் செய்து வருகின்றனர். என்று சொல்கிறார் வீரவநல்லூர் கோயிலில் தீமிதி திருவிழாவில் கரககுமரராய் தொடர்ந்து தீமிதி திருவிழாவில் தலைமை ஏற்று நடத்தி வருகிறார்.


Favorite tags



Tirunelveli Business Directory