திருநெல்வேலியின் தாமிரபரணி வரலாறு (4 of 53)


 
தாமிரபரணி ஆற்றின் கிளையாறுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது சேர்வலாறு. இந்த ஆற்றில் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட அணை உள்ளது.
 
பாபநாசம் அணையை வடிவமைத்த ஆங்கிலேய கட்டிட கலை நிபுணர் கர்னல் பிராட், பொறியாளர் கார்வார்டு ஆகியோர் சேர்வலாறு அணையையும் வடிவமைத்தனர். சுமார் 3 மைல் துhரம் மலையை குடைந்து குகை வழியே இந்த இரண்டு அணைகளை இணைத்துள்ளனர். இது ஒரு குகைப் பாதை. பாபநாசத்தில் இருந்து 75 மைல் அல்லது 120 கிலோ மீட்டர்தூரம் ஓடும் தாமிரபரணி மன்னார் வளைகுடாவில் புன்னக்காயல் என்னும் இடத்தில் இந்து மகா சமுத்திரத்தில் கலக்கிறது.
 
அணைக்கட்டுகள்
 
தாமிரபரணியில் 8 குறு அணைக்கட்டுகள் உள்ளது. இவை அனைத்தும் நமது நாட்டை ஆண்ட குறுநில மன்னர்களால் கட்டப்பட்டது. அவை கோடை மேலழகியான் அணைக்கட்டு, நதியுண்ணி அணைக்கட்டு, கன்னடியன் அணைக்கட்டு, பழவு+ர் அணைக்கட்டு, அரியநாயகிபுரம் அணைக்கட்டு, மருதுhர் அணைக்கட்டு, திருவைகுண்டம் அணைக்கட்டு ஆகியவை ஆகும.
 
இந்த அணைக்கட்டுகளில் 11 கால்வாய்கள் உள்ளது. அவை கோடைமேலழகியான் அணைக்கட்டு என்னும் தலையணையில் இருந்து பிரிகின்ற வடக்கு மற்றும் தெற்கு என்னும் இரு கால்வாய்கள். நதியுண்ணி அணைக்கட்டு கட்டில் இருந்து பிரிகின்ற நதியுண்ணி கால்வாய்.
 
கன்னடியன் கால்வாயில் இருந்து பிரிகின்ற கன்னடியன் கால்வாய். அரியநாயகிபுரம் அணைக்கட்டில் இருந்து பிரிகின்ற கோடகன் கால்வாய். பழவூர் அணைக்கடடில் இருந்து பிரிகின்ற பாளையங்கால்வாய். சுத்தமல்லி அணைக்கட்டில் இருந்து பிரிகின்ற திருநெல்வேலி கால்வாய் ஆகியவை நெல்லை மாவட்டத்தில் உள்ளது.
 
விமானத்தை விரட்டும் வண்டுகள்
 
தாமிரபரணி நதி தோன்றும் இடத்தை எட்டிப்பிடிக்காமல் இருப்பதற்கு இன்னொரு வதந்தி கூட இப்பகுதியில் நிலவி வருகிறது. இங்கு ராட்சத வண்டுகள் இருப்பதாகவும் அந்த வண்டுகள் இங்கு வரும் சிறு விமானங்களின் சத்தம் கேட்டு விட்டால் பறந்து சென்று அந்த விமானத்தையே தாக்கி அதன் இறக்கைகளை உடைத்து விடுவதாகவும் அவ்வளவு பலம் வாய்ந்த அந்த வண்டுகள் இறைச்சல் கேட்டால் மட்டுமே இவ்வாறு சிPறிப்பாயும் என இப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.


Favorite tags



Tirunelveli Business Directory