கார்த்தி- ரஞ்சனி திருமணம்

கார்த்தி- ரஞ்சனி திருமணம்
பதிவு செய்த நாள் ஞாயிறு 3, ஜூலை 2011
நேரம் 6:29:05 PM (IST)

நடிகர் சிவகுமாரின் இளைய மகனும் முன்னணி நடிகருமான கார்த்தியின் திருமணம் இன்று கோவையில் சிறப்பாக நடந்தது. தமிழர் மரபுப்படி திருப்பல்லாண்டு, திருப்புகழ், திருவாசகம் என தமிழ் மறைகள் முழங்க, மணமகள் ரஞ்சனி கழுத்தில் தாலி கட்டினார் கார்த்தி. நடிகர் சிவகுமாரின் இளைய மகனும் நடிகருமான கார்த்திக்கும் ஈரோடு அருகே உள்ள கிலாம்பாடியைச் சேர்ந்த சின்னசாமி - ஜோதி மீனாட்சியின் மகள் ரஞ்சனிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் கோவை கொடிசியா அரங்கில் இன்று நடைபெற்றது. இந்திரலோகம் போல அலங்கரிக்கப்பட்டிருந்த கொடிசியா அரங்கில் திரைப்பட கலை இயக்குநர் சந்திரசேகர் திருமணத்துக்கென ஸ்பெஷல் மேடை அமைத்திருருந்தார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.35 மணிக்கு நடிகர் கார்த்தி மணமகள் ரஞ்சனி கழுத்தில் தாலி கட்டினார்.



Tirunelveli Business Directory