குட்டிதலயின் கொண்டாட்ட ஸ்டில்ஸ்

குட்டிதலயின் கொண்டாட்ட ஸ்டில்ஸ்
பதிவு செய்த நாள் திங்கள் 2, மார்ச் 2015
நேரம் 7:25:59 PM (IST)

நடிகர் அஜீத்தின் மனைவி ஷாலினி இரண்டாவது முறையாக கர்ப்பம் ஆனார். சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று அதிகாலை 4.30 மணிக்கு அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். தாயும், சேயும் நலமாக உள்ளனர். இதையடுத்து பிரபலங்கள், ரசிகர்கள் அஜீத்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அதில் பலர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இன்று காலையில் இருந்து பலரும் ட்விட்டரில் குட்டி தல பிறந்ததை பற்றி பேசி வருகின்றனர்.குட்டி தலயின் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது அஜீத் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தூத்துக்குடியில் அவரது ரசிகர்கள் இன்று அண்ணாநகர் மெயின்ரோட்டில் வைத்து பட்டாசு வெடித்து அந்த வழியாக சென்ற மக்களுக்கு இனிப்புகள் வழங்கி மாவட்ட தலைவர் ஜெபக்குமார் தலைமையில் த‌ங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினர். தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் குட்டி தலக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் போஸ்டர்கள், பேனர்கள் என வைத்து அசர வைக்கின்றனர்.



Tirunelveli Business Directory