வியப்பளிக்கும் பாடி பெயிண்டிங் ஸ்டில்ஸ்

வியப்பளிக்கும் பாடி பெயிண்டிங் ஸ்டில்ஸ்
பதிவு செய்த நாள் புதன் 27, மே 2015
நேரம் 8:48:49 PM (IST)

மனித உடல்களுக்கு வர்ணமளித்து அவற்றை உயிருள்ள விலங்குகள் போல் தோற்றமளிக்க வைப்பது தான் பாடி பெயிண்டிங். பாடி பெயின்ட்டிங்கில் இத்தாலியைச் சேர்ந்த ஓவியர் ஜோஹன்ஸ் கலர்ஃபுல் கிங்.இதை வடிவமைத்ததோடு மட்டும் அல்லாமல், நகர்வதைப் போல வீடியோவும் எடுத்திருக்கிறார். உண்மையிலேயே ஒரு பச்சோந்தி மரக்கிளைகளில் நகர்ந்தால் எப்படி இருக்குமோ, அப்படியே ஒரு தோற்றத்தைத் தன் பெயின்ட்டிங்கில் கொண்டு வந்துள்ளார் ஜோஹன்ஸ். இதுவரை பாடி பெயின்ட்டிங்கில் மட்டும் பல விருதுகளை வென்றுள்ள இவர் அமெரிக்காவில் பாடி பெயின்ட்டிங் மாஸ்டராகப் பணிபுரிகிறார்.கூகுளில் இவர் பெயரை தேடினால் அதில் வரும் புகைபடங்களை பார்த்தால் கண்டிப்பாக மெர்சல் ஆகிவிடுவீர்கள். வாசகர்களுக்காக அதில் சில படங்களை கேலரியில் தந்துள்ளோம். பார்த்து மெர்சலாகுங்கள்.



Tirunelveli Business Directory