சிவகார்த்திகேயனின் அடுத்த பட பூஜை

சிவகார்த்திகேயனின் அடுத்த பட பூஜை
பதிவு செய்த நாள் புதன் 1, ஜூலை 2015
நேரம் 7:18:45 PM (IST)

சிவகார்த்திகேயன் நெருங்கிய நண்பரான ராஜா, 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி இப்படத்தை தயாரிக்க இருப்பதாக முதலில் அறிவித்தார்கள். தொடர்ந்து இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இசையமைப்பாளர் அனிருத், ஒலி வடிவமைப்புக்கு ஆஸ்கர் வென்ற ரெஸுல் பூக்குட்டி, சிறப்பு மேக்கப்புக்கு ஐ திரைப்படத்தில் பணியாற்றிய வீடா நிறுவனத்தைச் சேர்ந்த ஷான் ஃபுட், கலை இயக்குநராக முத்துராஜ், படத்தொகுப்புக்கு ஆண்டனி ரூபன், சண்டைப் பயிற்சியாளராக அனல் அரசு, ஆடை வடிவமைப்பாளராக அனு பார்த்தசாரதி என படக்குழுவைச் சேர்ந்த மற்றவர்களும் ஒவ்வொருவராக அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.Tirunelveli Business Directory