ரஜினி நடிக்கும் கபாலி ஃப்ர்ஸ்ட் லுக்

ரஜினி நடிக்கும் கபாலி ஃப்ர்ஸ்ட் லுக்
பதிவு செய்த நாள் புதன் 16, செப்டம்பர் 2015
நேரம் 8:29:42 PM (IST)

மெட்ராஸ் படத்தை இயக்கிய ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்கும் கபாலி படத்தின் ப்ர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஒரு அடுக்குமாடி கட்டடத்தில் பேக்கிரவுண்டில் மலேசியாவின் சிட்டி தெரிகிறது. ரஜினி ஒரு ஷோபாவில் சும்மா கெத்தாக உட்கார்ந்து இருக்கிறார். இன்னொரு போஸ்டரில் போஸ்டரில் பல ரவுடிகளை சங்கிலியால் கட்டிப்போட்டு தலையை சிலுப்பி ஆக்ரோஷமாக போஸ் கொடுக்கிறார். கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படத்தில் ரஜினி மலேசிய தாதாவாக நடிக்கிறாராம். இப்படத்தில் ராதிகா ஆப்தே, அட்டகத்தி தினேஷ், கலையரசன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணம் இசையமைக்கும் இப்படத்திற்கு மானாட மயிலாட சதீஷ் நடனம் அமைக்கிறார். பாடல்களை கபிலன்,உமாதேவி, கானா பாலா எழுதுகின்றனர். உடைகளை அனுவர்தன் வடிவமைக்கிறார்.Tirunelveli Business Directory