» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ரயில் நிலையத்தில் கலவரம் ஏற்படுத்தியதாக நடிகர் ஷாருக்கான் மீது வழக்குப் பதிவு

வியாழன் 16, பிப்ரவரி 2017 5:02:22 PM (IST)

ரயில் நிலையத்தில் கலவரம் ஏற்படுத்தியதாக நடிகர் ஷாருக்கான் மீது ரயில்வே போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். 

நடிகர் ஷாருக்கான் நடித்த ‘ரயீஸ்’ என்ற படம் தற்போது நாடு முழுவதும் வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கிறது. இந்த படத்தை பிரபலப்படுத்துவதற்காக ஷாருக்கான் கடந்த மாதம் 24-ந் தேதி மும்பையில் இருந்து டெல்லிக்கு கிராந்தி  எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றார். முக்கிய ரயில் நிலையங்களில் அவர் தனது படத்தை விளம்பரப்படுத்தினார். 

ரயிலில்  இருந்தவாறு ரசிகர்களை பார்த்து கைய சைத்தார். ஷாருக்கானை பார்ப்பதற்காக ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் அவரது ரசிகர்கள் குவிந்ததால் நெரிசல் ஏற்பட்டது. ராஜஸ்தான் மாநிலம் கோடா ரயில் நிலையத்தில் ரயில் சிறிது நேரம் நின்றபோது ஷாருக்கானை பார்க்க அவரது ரசிகர்கள்  திரண்டதால் நெரிசல் உருவானது. நெரிசலின் போது ரயில் நிலையத்தில் இருந்த கடைகள் சேதமானது. பொது சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டன.

அங்கு கடை வைத்து நடத்தி வரும் விக்ரம்சிங் பெரிதும் பாதிக்கப்பட்டார். அவரது கடை முழுமையாக சேதமானது. பணமும்  திருட்டுபோனது. இது தொடர்பாக அவர் கோடா ரயில்வே போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி ஷாருக்கான் மீது வழக்குபதிவு செய்து உள்ளனர். பொது சொத்துக்களை  சேதப்படுத்துதல் மற்றும் கலவரத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது வழக்குபதிவாகி இருக்கிறது.


மக்கள் கருத்து

ஒருவன்Feb 16, 2017 - 06:04:13 PM | Posted IP 59.96*****

வடை நாட்டுக்காரன் (இந்தி வெறியன் ) எல்லாம் சில பேர் சைக்கோ நிம்மதியாக இருக்கமாட்டான்..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory