» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மெஜாரிட்டியை நிருபித்துவிட்டு வாருங்கள்... சசிகலா உத்தரவு..? முதல்வரின் பெங்களூர் பயனம் ரத்து..!!

வெள்ளி 17, பிப்ரவரி 2017 11:34:17 AM (IST)

மெஜாரிட்டியை நிருபித்துவிட்டு தன்னை சந்திக்க வந்தால் போதும் என்று கூறி தமிழக முதல்வர் பழனிச்சாமியை சந்திப்பதை தவிர்த்துள்ளார் சசிகலா.

அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி நேற்று மாலை தமிழக முதல்வராக பதவி ஏற்றார். பதவி ஏற்றதும் அவர் அமைச்சர்களுடன் விமானத்தில் பெங்களூர் சென்று சசிகலாவை சந்திக்க திட்டமிட்டார். இது தொடர்பாக சிறையில் இருக்கும் சசிகலாவிடம் வக்கீல்கள் செந்தில், அசோகன் ஆகியோர் சந்தித்து தெரிவித்தனர். மேலும் சிறை அதிகாரிகளிடமும் அனுமதி பெற திட்டமிட்டனர்.

இந்நிலையில், இப்போதைக்கு எடப்பாடி பழனிச்சாமி இங்கு வர வேண்டாம், மெஜாரிட்டியை நிரூபித்த பின்பு வரலாம் என்று சசிகலா கூறிவிட்டாரம். இதனால் சசிகலாவை சந்திக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டது. மேலும் பெங்களூர் சிறை முன்பு சசிகலா அடைக்கப்பட்ட போது அவரது ஆதரவாளர்கள் வந்த கார்கள் உடைக்கப்பட்டன. எனவே தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட பிறகு எடப்பாடி பழனிச்சாமி சிறைக்கு வந்து சசிகலாவை சந்திப்பார் என்று கர்நாடக அ.தி.மு.க வட்டாரங்கள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd

Guru HospitalTirunelveli Business Directory