» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பள்ளியில் எலி விழுந்த உணவை சாப்பிட்ட 9பேர் மருத்துவமனையில் அனுமதி: டெல்லியில் பரபரப்பு

வெள்ளி 17, பிப்ரவரி 2017 12:53:14 PM (IST)

டெல்லி அரசு பள்ளியில் எலி இறந்து கிடந்த உணவை சாப்பிட்ட 9 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுடெல்லியில் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு நேற்று மதியம் வழங்கப்பட்ட உணவில் எலி இறந்து கிடந்து உள்ளது. இதனை சாப்பிட்ட 9 மாணவர்களுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ளது. இதுதொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா டுவிட்டரில் வெளியிட்டு உள்ள தகவலில், அரசு பள்ளியில் வழங்கப்பட்ட உணவில் இருந்து இறந்த எலி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 9 பள்ளி மாணவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். நான் மருத்துவர்களிடம் பேசிஉள்ளேன், மாணவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர், என்று குறிப்பிட்டுள்ளார். 

இவ்விவகாரம் தொடர்பாக டெல்லி அரசு எப்.ஐ.ஆர். பதிவு செய்து உள்ளது என்றும் தெரிவித்து உள்ளார். நாளை (இன்று) முதல் உணவு அறையில் மாணவர்களுக்கு தயாரிக்கப்படும் உணவுகளை எங்களுடைய அதிகாரிகள் கண்காணிப்பார்கள் எனவும் மணிஷ் சிசோடியா கூறிஉள்ளார். எலி இறந்து கிடந்த உணவு தியோலி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் மதன் மோகன் மால்வியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory