» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மும்பையில் சொகுசு காரை ஓட்டிய எந்திரன் பட வில்லன் நடிகருக்கு ரூ.29 லட்சம் அபராதம்!!

வெள்ளி 17, பிப்ரவரி 2017 5:06:43 PM (IST)

வெளிமாநிலத்தில் பதிவு செய்து விட்டு சொகுசு காரை மும்பையில் ஓட்டிய எந்திரன் பட வில்லன் நடிகருக்கு ரூ.29 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே மும்பையில் சாலை வரி அதிகமாகும். இங்கு புதிதாக வாங்கப்படும் வாகனங்களுக்கு 20 சதவீதம் சாலை வரி விதிக்கப்படுகிறது. எனவே பலர் சாலை வரி 2 முதல் 2½ சதவீதம் மட்டும் விதிக்கப்படும் ஜார்கண்ட் போன்ற மாநிலங்கள் அல்லது புதுச்சேரி, டையு-டாமன் போன்ற யூனியன் பிரதேசங்களில் விலை உயர்ந்த வெளிநாட்டு சொகுசு கார்களை வாங்கி மும்பையில் பயன்படுத்தி வருகின்றனர். இது சட்டவிரோதம் ஆகும்.

இதனால் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வெளிமாநிலங்களில் பதிவு செய்யப்பட்டு மும்பையில் ஓட்டப்பட்டு வரும் விலை உயர்ந்த சொகுசு கார்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வெளிமாநிலத்தில் பதிவு செய்யப்பட்டு மும்பையில் சட்டவிரோதமாக ஓட்டப்பட்டு வந்த 451 சொகுசு வெளிநாட்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த கார்கள் சுமார் ரூ.10 கோடி வரி ஏய்ப்பு செய்து வாங்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார். பிடிபட்டதில் பிரபல நடிகர் டேனியின் சொகுசு காரும் அடங்கும். அவருக்கு ரூ.29 லட்சம் அபராதம் விதித்தனர். தமிழில் வெளியான எந்திரன் படத்தில் டேனி, வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd

Guru HospitalTirunelveli Business Directory