» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வேட்டி கட்டி வந்தவர்களை உள்ளே அனுமதிக்காத மால் நிர்வாகம் : நடிகர் வேதனை

சனி 15, ஜூலை 2017 8:36:22 PM (IST)

ஷாப்பிங் மாலிற்கு வேட்டி கட்டி வந்தவர்களை மால் நிர்வாகம் உள்ளே விட மறுத்த சம்பவம் கொல்கத்தாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவை சேர்ந்த நடிகர் டெப்லீனா என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் இந்த சம்பவம் குறித்து விவரித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது. குயிஸ்ட் மாலிற்கு இந்தியாவின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து வந்த இருவரை தடுத்து நிறுத்திய மால் நிர்வாகம், வேட்டி கட்டியவர்கள் உள்ளே அனுமதி இல்லை என்று கூறியுள்ளது. இது போன்ற பேதமை நம் சமூகத்தில் நிலவுவது மிகவும் கவலைக்குரியது என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

வேட்டி கட்டி சென்றவர்களை மால் நுழைவாயிலில் நிறுத்திய காவலர்கள், தங்களிடம் இருந்த வாக்கி டாக்கி மூலம் உள்ளே விடலாமா என்று அனுமதி கேட்டுள்ளனர். தடுத்து நிறுத்தப்பட்ட நபர் ஆங்கிலத்தில் பேசி கேள்வி எழுப்பியதை அடுத்து உள்ளே அனுமதிக்கப்பட்டார் என்கிறார்  டெப்லீனா சென்.பின்னர் உள்ளே சென்று நிர்வாகத்திடம் கேட்ட போது வேட்டி கட்டியவர்கள் உள்ளே வர அனுமதியில்லை என்று கூறியுள்ளனர்.மாலின் மேலாளர் வந்து பேசும் போது இவை எவற்றையும் வீடியோ பதிவு செய்யக்கூடாது என்று சொல்லியுள்ளார். இது நமக்கு ஏற்ற இடம் இல்லை என்று அங்கிருந்து வெளியேறி விட்டதாக டெப்லீனா சென் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து

தமிழன்Jul 16, 2017 - 10:47:37 AM | Posted IP 180.2*****

ஆங்கிலேய அடிமைகள் இந்த மால் நடத்துபவர்கள் ?????

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory