» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

குடியரசுத் தலைவர் தேர்தல்: பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி வாக்களித்தார்

திங்கள் 17, ஜூலை 2017 12:31:24 PM (IST)குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நாடு முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது. டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி வாக்களித்தார். 
 
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து, புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. டெல்லியில் பாராளுமன்ற வளாகத்திலும், தமிழ்நாட்டில் சென்னையில் அமைந்துள்ள சட்டசபை வளாகத்திலும், இதே போன்று பிற மாநிலங்களில் உள்ள சட்டசபை வளாகங்களிலும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் மொத்தம் 32 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார். பா.ஜனதா தலைவர் அமித்ஷாவும் தன்னுடைய வாக்கை பதிவு செய்தார். அதனை தொடர்ந்து எம்.பி.க்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள். 

இத்தேர்தலில் பா.ஜனதா சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்க்கட்சிகள் சார்பில் மீரா குமாரும் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். பாராளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்), அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கின்றனர். தேர்தலில் 776 தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள், 4,120 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 4,896 பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். (எம்.பி.க் களில் 543 பேர் மக்களவை உறுப்பினர்கள், 233 பேர் டெல்லி மேல்-சபை உறுப்பினர்கள்). ஒரு எம்.பி.யின் ஓட்டு மதிப்பு 708 ஆகும். ஆனால் எம்.எல்.ஏ.க்கள் ஓட்டின் மதிப்பு, அந்தந்த மாநில மக்கள் தொகைக்கு ஏற்ப மாறுபடும். இன்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி தேர்தலில் ஓட்டுப்பதிவு 10 மணிக்கு நடக்கிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory