» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சிறைத்துறை டிஐஜி ரூபா பணியிட மாற்றம் நியாயமே : தினகரன் ஆதரவாளர் புகழேந்தி பேட்டி

திங்கள் 17, ஜூலை 2017 2:15:06 PM (IST)

கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா பணியிட மாற்றம் நியாயமே என தினகரன் அணியின் புகழேந்தி கூறியுள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா சிறை அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்து, சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. சசிகலாவுக்கு விதிகளை மீறி சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக, சிறைத்துறை டிஐஜி ரூபா அளித்த அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா போக்குவரத்து பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டது மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி யுள்ளது. இது குறித்து பேட்டியளித்த தினகரன் அணியின் புகழேந்தி, சிறைத்துறை டிஐஜி ரூபா பணியிட மாற்றம் நியாயமே என கூறியுள்ளார். மேலும் இந்த குற்றச்சாட்டு உண்மையானால் அதிகாரிகள் தண்டிக்கப் படுவார்கள். இது குறித்த விசாரணை அறிக்கை விரைவில் வெளியாக உள்ளது என்று கூறிய அவர் சிறையில் எந்த விதமான சலுகை களையும் சசிகலா பெறவில்லை என்றும் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory