» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு திராணி இல்லை: ஃபரூக் அப்துல்லா சொல்கிறார்

திங்கள் 17, ஜூலை 2017 5:23:11 PM (IST)

சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு திராணி இல்லை என ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா கூறியுள்ளார். 

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில்: லடாக் பகுதியின் பெரும்பாலான இடங்களை சீனா ஆக்கிரமித்து விட்டது. அதுகுறித்து நாம் சப்தம் எழுப்புகிறோமே தவிர, அதனை திரும்பப் பெறும் அளவுக்கு போதிய நடவடிக்கைகள் எதிலும் இதுவரை ஈடுபடவில்லை. அதற்கான தைரியமும் நம்மிடம் இல்லை. சீனாவுடன் இந்தியா நட்பு பாராட்டுவதே அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வாக அமையும். 

இந்த விஷயத்தில் சீன அரசுடன் நட்பு பாராட்டும் விதமான நடவடிக்கைகளில் இந்திய அரசு உடனடியாக இறங்க வேண்டும். சீன அரசு பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டுவதே நம்மால் தான். இந்திய அரசு மட்டும் சீன அரசோடு நல்லிணக்கத்துடன் செயல்பட்டு வந்திருந்தால் அவர்கள் நிச்சயம் பாகிஸ்தானுடன் நெருங்கி இருக்க மாட்டார்கள். அதுபோலதான் தலாய் லாமா சர்சையும். அவரை இந்தியாவை விட்டு உடனடியாக வெளியேற்றும்படி சீனா கேட்கிறது. ஆனால், இந்தியாவுக்கு வந்தாரை வாழவைத்துதான் பழக்கம், வெளியேற்றி பழக்கமில்லை என்றார்.


மக்கள் கருத்து

மக்கள்Jul 18, 2017 - 04:47:50 PM | Posted IP 59.99*****

பன்றிஸ்தான் காலி ஆகிடும் என்று பயமா?

rajaJul 18, 2017 - 12:31:19 PM | Posted IP 122.1*****

உண்மை

தமிழன்Jul 18, 2017 - 10:27:12 AM | Posted IP 180.2*****

தேச துரோகி பரூக் அப்துல்லா ......

saamyJul 17, 2017 - 10:33:58 PM | Posted IP 117.2*****

இவனுக்கு - இந்த தேச துரோகிக்கு - மரணதண்டனை கூட போதுமானது இல்லை - நாய் ஜென்மம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory