» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நாடு முழுவதும் செயல்படாத வருமான வரித்துறை ஆணையர்கள் 245 பேர் அதிரடி இடமாற்றம்

திங்கள் 17, ஜூலை 2017 5:52:03 PM (IST)

நாடு முழுவதும் சரியாக பணியாற்றாத வருமான வரித்துறை ஆணையர்கள் 245 பேரை மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் அதிரடியாக பணிமாற்றம் செய்துள்ளது . 

சரியாக வேலை செய்யாதவர்கள், குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்கள் என வகைபடுத்தப்பட்டு, அதன் அடிப்படையில் இந்த இடமாற்றம் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் மீது துறைரீதியான அல்லது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. வருமான வரித்துறையை மேம்படுத்துவதற்காக மண்டல வாரியாக களை எடுக்கும் பணிகளை நேரடி வரிவிதிப்பு வாரியம் துவக்கி உள்ளது.

இதன்படி, நாடு முழுவதிலும் உள்ள வருமான வரித்துறை தலைவர்களின் விபரங்கள், அவர்களின் நடவடிக்கைகள் பற்றிய ரகசியமாக கண்காணிக்கப்பட்டு, விபரம் சேகரிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் சரியாக இருந்தால் மட்டுமே வருமான வரி செலுத்துவோர் முறையாக செலுத்துவர். இதனால் வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என நேரடி வரி விதிப்பு வாரியம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory