» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பா.ஜ.கவின் குடியரசுத் துணை தலைவர் வேட்பாளராக வெங்கையாநாயுடு அறிவிப்பு

திங்கள் 17, ஜூலை 2017 8:38:10 PM (IST)

பா.ஜ.கவின் குடியரசுத் துணை தலைவர் வேட்பாளராக மத்தியஅமைச்சர் வெங்கய்ய நாயுடு அறிவிக்கப்பட்டுள்ளார்.

இன்று இந்தியா முழுவதும் ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது. இந்நிலையில் துணை குடியரசுத்தலைவர் பதவிக்கான வேட்பாளரை பாஜக அறிவிக்காமலே இருந்தது. தற்போது வேட்பாளரை தேர்வு செய்வதற்கான பாஜக ஆட்சிமன்ற குழு கூட்டம்  பிரதமர் மோடி தலைமையில் மாலையில் நடைபெற்றது. இதையடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 4-ம் தேதி தொடங்கியது. மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் ஆகும்.இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக 18 எதிர்க்கட்சிகள் கொண்ட கூட்டணி வேட்பாளாராக கோபால கிருஷ்ண காந்தி நிறுத்தப்பட்டுள்ளார். இதையடுத்து ஆளும் பா.ஜ.க கூட்டணி வேட்பாளராக வெங்கய்ய நாயுடு அறிவிக்கப்பட்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory