» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1எச் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தும் நடவடிக்கையில் தோல்வி

வியாழன் 31, ஆகஸ்ட் 2017 8:44:52 PM (IST)

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1எச் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தும் நடவடிக்கையில் தோல்வி ஏற்பட்டுள்ளது.

பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் மூலம் தரை, வான், கடல்சார் ஆராய்ச்சித் தகவல்களுக்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1எச் செயற்கைக் கோளை சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தும் முயற்சியில் தோல்வி ஏற்பட்டது. செயற்கைக்கோள் வெப்பத்தடுப்பு அமைப்பு சரியாகப் பிரியவில்லை என்பதால் தோல்வியில் முடிந்ததாக இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தெரிவித்தார். ஆனால் ராக்கெட் சரியாகத் திட்டமிட்டபடி விண்ணில் செலுத்தப்பட்டது.

தோல்வியை உறுதி செய்த ஏ.எஸ்.கிரண்குமார், செய்தியாளர்களிடம் கூறுகையில், "எந்தக் கட்டத்திலும் பிரச்சினை ஏற்படவில்லை. ஆனால் வெப்பத்தடுப்பு பிரிய வேண்டும். வெப்பத்தடுப்புப் பிரிந்தால் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்படும். உள்ளுக்குள் பிரிந்தது, ஆனால் 4-வது கட்டத்தில் வெப்பத்தடுப்பு பிரியவில்லை. என்ன நடந்தது என்ற விவரங்களை சேகரித்து வருகிறோம்” என்றார்.


மக்கள் கருத்து

நிஹாSep 1, 2017 - 01:26:10 PM | Posted IP 117.2*****

இதற்கு காரணம் தொழில் நுட்ப கோளாறு மட்டுமல்ல,ஊழல் அல்லது வெளிநாட்டு சதி என எதுவும் இருக்கலாம்....யாருக்கு தெரியும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory