» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ராணுவத்தில் வெடிமருந்துகள் பற்றாக்குறையா? சிஏஜி அறிக்கை தவறானது: நிர்மலா சீதாராமன் விளக்கம்

செவ்வாய் 12, செப்டம்பர் 2017 10:24:17 AM (IST)இந்திய ராணுவத்தில் வெடிமருந்துகள் பற்றாக்குறை என்று மத்திய கணக்கு தணிக்கை துறை அளித்துள்ள அறிக்கை தவறானது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது, மத்திய கணக்கு தணிக்கைத் துறையின் (சிஏஜி) அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையில், ‘அண்டை நாடுகள் ஒருவேளை நம் நாட்டின் மீது போர் தொடுத்தால், அதை எதிர் கொள்ள நம் ராணுவத்திடம் வெடிமருந்துகள் போதிய அளவு இல்லை. வெறும் 20 நாட்களுக்கு மட்டுமே வெடிமருந்து கையிருப்பு உள்ளது. குறைந்தபட்சம் 40 நாட்களுக்குத் தேவையான வெடிமருந்துகள் கையிருப்பு இருக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் கடந்த 2013-ம் ஆண்டுக்குப் பிறகு ராணுவத்துக்கு தேவையான அளவு வெடிமருந்துகளை அரசு வெடிமருந்து தொழிற்சாலை சப்ளை செய்யவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் பாதுகாப்புத் துறை புதிய அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமன், ராஜஸ்தான் மாநிலம் உட்டார்லாய் விமானப் படை தளத்தை நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ராணுவத்தில் வெடிமருந்து பற்றாக்குறை என்று சிஏஜி வெளியிட்ட அறிக்கை தவறானது. ராணுவத்திடம் ஆயுதங்கள் பற்றாக்குறை எதுவும் இல்லை. இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டியது தேவையற்றது. நான் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, ராணுவ உயரதிகாரிகள், நிபுணர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தினேன். ஆயுதங்கள் தொடர்ந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

நிர்மலா சீதாராமனுக்கு முன்பு பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் பதில் அளிக்கும்போது, ‘‘ஒரு கால கட்டத்தில் மட்டும்தான் வெடிமருந்து குறைவாக இருந்தது. அதன் பின்னர் தற்போது நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. வெடிமருந்துகளை கையிருப்பில் வைப்பது தொடர்ந்து நடக்கும் பணியாகும். எனவே, போதிய ஆயுதங்கள், வெடிமருந்துகள் பற்றியோ அல்லது போர் வந்தால் நமது படைகளின் தயார் நிலை குறித்தோ யாருக்கும் சந்தேகம் வேண்டாம்’’ என்று கூறினார்.


மக்கள் கருத்து

ஒருவன்Sep 14, 2017 - 06:22:08 PM | Posted IP 59.96*****

ஆமா.. பிராடு மோடி அரசு ..

உண்மைSep 13, 2017 - 01:52:48 PM | Posted IP 122.1*****

பாகிஸ்தான் முடிஞ்சது! சீனா பணிந்தது! இதுதாண்டா மோடி அரசு!

நிஹாSep 13, 2017 - 11:26:52 AM | Posted IP 117.2*****

மக்கள் பிரசனை பற்றிக்கேட்டால் கோமாளித்தனமாக பதில் சொல்லும் இவர் கண்டிப்பாக சி ஏ ஜி யை விட புத்திசாலி.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory