» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

செவ்வாய் 12, செப்டம்பர் 2017 5:45:50 PM (IST)

மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக ஒரு சதவிகிதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே 4 சதவிகித அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக ஒரு சதவிகிதம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜூலை 1 ஆம் தேதி முன் தேதியிட்டு அகவிலைப்படி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு மூலம், 50 லட்சம் அரசு ஊழியர்கள் 61 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory