» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பொக்ரான் சோதனையின்போது வாங்கிய பீரங்கி சேதம் : விசாரணைக்கு உத்தரவு

புதன் 13, செப்டம்பர் 2017 9:05:34 AM (IST)பொக்ரானில் நடந்த சோதனையின்போது புதிதாக வாங்கிய பீரங்கி சேதம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த பி.ஏ.இ.சிஸ்டம்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து இந்திய ராணுவத்துக்கு 145 ஹோவிட்சர் ரக பீரங்கிகள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இவற்றில், முதல்கட்டமாக 2 பீரங்கிகள் கடந்த மே மாதம் வந்து சேர்ந்தன.

இந்நிலையில், அந்த பீரங்கிகள், கள பரிசோதனைக்காக, ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு, இந்திய வெடிபொருட்களை பொருத்தி சுட்டபோது, ஒரு பீரங்கியின் குழல் வெடித்து சேதம் அடைந்தது. நல்லவேளையாக, யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

ஒருவன்Sep 14, 2017 - 06:20:58 PM | Posted IP 59.96*****

ஆமா , நான் யாருகிட்ட மண்டியிட வில்லை, "மேக் இந்த இந்தியா" திட்டம் எதற்கு , எல்லாம் பிராடு , போங்க நீங்களும் ஒங்க டுபாக்கூர் மோடியும் ..

உண்மைSep 13, 2017 - 01:50:28 PM | Posted IP 122.1*****

நாங்கள் காசு கொடுத்து வாங்கிக்கிறோம்! உன்னை காசு வாங்கி பெத்து எடுத்தாங்களா? வெளிநாட்டு விருந்தாளிக்கு? இப்படி மண்டி போடுற?

ஒருவன்Sep 13, 2017 - 01:11:04 PM | Posted IP 117.2*****

இந்தியா எவ்வளவு முன்னேறினாலும் , ஆயுதம் , சொகுசு ஹெலிகாப்டர், சொகுசு விமானம், பணக்காரர் பயன்படுத்தும் சொகுசு கார் ,..... எல்லாம் காசு கொடுத்து வெளிநாட்டில் தான் வாங்க வேண்டும்..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads
Tirunelveli Business Directory