» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

புல்லெட் ரயில் தேவையா? மோடியின் கனவு, எளிய மனிதனை பற்றியது அல்ல: சிவசேனா விமர்சனம்

வியாழன் 14, செப்டம்பர் 2017 3:57:28 PM (IST)

"மோடியின் கனவு, எளிய மனிதனை பற்றியது அல்ல. பெரும் தொழில் அதிபர்கள் பணக்கார்களை பற்றியது " என சிவசேனா விமர்சித்துள்ளது

புல்லெட் ரயில் திட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ள சிவசேனா கட்சி, இந்த திட்டம் எளிய மனிதனின் கனவு இல்லை என்றும் தெரிவித்துள்ளது. மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா அண்மைக் காலமாக பாரதீய ஜனதா அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்த நிலையில், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மற்றும் பிரதமர் மோடி ஆகிய இருவரும் இணைந்து அகமதாபாத்- மும்பை இடையேயான புல்லெட் ரயில் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டினர். 

இந்நிலையில், சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் கூறப்பட்டுள்ளதாவது:-புல்லெட் ரயில் நாட்டின் தேவைக்கு பொருத்தமானதுதானா? பல ஆண்டுகளாக கடனை தள்ளுபடி செய்யுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். யாருமே புல்லெட் ரயிலை கேட்கவில்லை. மோடியின் கனவு, எளிய மனிதனை பற்றியது அல்ல. பெரும் தொழில் அதிபர்கள் பணக்கார்களை பற்றியது ஆகும். புல்லெட் ரயில் திட்டம் வேலை வாய்ப்பு உருவாக்கும் என்று கூறுபவர்கள் தவறான கருத்தை கூறுகின்றனர். ஏனெனில், ஜப்பான், இயந்திரங்களில் இருந்து தொழிலாளர்கள்வரை தங்கள் நாட்டில் இருந்து இங்கு கொண்டு வருகிறது” இவ்வாறு அதில் தெரிவிக்கக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

உண்மைSep 15, 2017 - 05:15:34 PM | Posted IP 122.1*****

சிறுநரிகளுக்கு என்றும் தோல்விதான் மிஞ்சும்! ஜெய் ஹிந்த்!

மக்களின் ஒருவன்Sep 15, 2017 - 08:49:08 AM | Posted IP 61.2.*****

உண்மை உனக்கு அறிவு இருக்கா ? மோடி என்ற பிஜேபி வேற , சிவா சேனா வேற அவருக்கு இந்தி பிடிக்காது, நீ மோடியின் கைகூலி. பேசாதே

iNDIANSep 14, 2017 - 06:06:48 PM | Posted IP 59.99*****

கரெக்ட்

உண்மைSep 14, 2017 - 05:42:21 PM | Posted IP 122.1*****

ஒருவன் சிவசேனா எங்க பங்காளிதான் ரொம்ப பேசக்கூடாது! அவனே வந்து வெளுத்துப்புடுவான்!

ஒருவன்Sep 14, 2017 - 05:27:49 PM | Posted IP 59.96*****

அவர் சொல்வதெல்லாம் சரியே ...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory