» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ரஜினி, கமல் கட்சி தொடங்கினால் ஆதரிக்க மாட்டேன்: நடிகர் பிரகாஷ்ராஜ் திட்டவட்டம்
திங்கள் 13, நவம்பர் 2017 9:03:41 AM (IST)
‘‘ரஜினி, கமல் அரசியல் கட்சி தொடங்கினால் ஆதரிக்க மாட்டேன்’’என்று நடிகர் பிரகாஷ்ராஜ் காட்டமாக கூறியுள்ளார்.

அரசியலுக்கு வரும் நடிகர்கள் சமூக பிரச்னைகளை எந்தளவுக்கு புரிந்து கொள்கிறார்கள், நடிகர்கள் வருவது அரசியலுக்கு பேரழிவு. அரசியலுக்கு வந்த பிறகு அவர்கள் அதை தீர்த்து வைப்பார்களா, அதற்கான திட்டங்கள் அவர்களிடம் இருக்கிறதா? என்பதை யோசிக்க வேண்டும். ரஜினி, கமல், பவன் கல்யாண் அரசியல் கட்சி தொடங்கினால் அதை ஆதரிக்க மாட்டேன். நானும் அரசியல் கட்சி தொடங்க மாட்டேன். ஜிஎஸ்டி.க்கு பிரதமர் நரேந்திர மோடி மட்டும் காரணம் அல்ல. இது குறித்து மெர்சல் படத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்று இருப்பதாக சிலர் சொல்கிறார்கள். அது தவறாக இருந்தால் பாஜ.வினர் கண்டிப்பாக கேள்வி எழுப்பலாம்.
அதைவிட்டு சாதி விஷயத்தை முக்கியமாக வைத்துக் கொண்டு சண்டை போடக்கூடாது. ஜிஎஸ்டி சரியில்லை என்று நான் சொன்னால் அதற்காக நான் பிரதமருக்கு எதிராக பேசுவதாக ஏன் நினைக்கிறீர்கள்? தற்போதுள்ள சூழ்நிலையில் நாம் கேள்வி கேட்கிறவர்களாக இருக்க வேண்டும். இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறினார். இதற்கிடையே தனது பேட்டி குறித்து டிவிட்டரில் விளக்கம் அளித்த பிரகாஷ்ராஜ், ‘பிரபலமாக இருப்பதாலேயே நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்றுதான் சொன்னேன். சிலர் அதை திரித்து அரசியலுக்கு நடிகர்களே வரக்கூடாது என நான் சொன்னதாக பரப்புகிறார்கள். அது தவறு’ என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கூட்டுறவு சங்க தேர்தல் நடத்த தடையில்லை: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 20, ஏப்ரல் 2018 4:24:20 PM (IST)

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு
வெள்ளி 20, ஏப்ரல் 2018 3:40:58 PM (IST)

உச்சநீதிமன்ற நீதிபதி தீபக்மிஸ்ராவை தகுதி நீக்கம் செய்யக் கோரி எதிர்கட்சிகள் பரபரப்பு புகார்
வெள்ளி 20, ஏப்ரல் 2018 1:20:53 PM (IST)

தமிழகத்துக்கு உரிய நிதியை நிதிக் குழு ஒதுக்கீடு செய்ய துனை முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தல்
வெள்ளி 20, ஏப்ரல் 2018 12:13:17 PM (IST)

ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
வெள்ளி 20, ஏப்ரல் 2018 11:02:00 AM (IST)

மதியம் முடக்கப்பட்ட இந்திய உச்சநீதிமன்றத்தின் இணையதளம் மீட்கப்பட்டது
வியாழன் 19, ஏப்ரல் 2018 7:40:53 PM (IST)
