» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு என்.டி.ஆர்.தேசிய விருது: ஆந்திர அரசு அறிவிப்பு

புதன் 15, நவம்பர் 2017 8:54:07 AM (IST)

திரைப்படத்துறையில் சாதனை நிகழ்த்தியதற்காக நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் ஆந்திர அரசின் என்.டி.ஆர்.தேசிய விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

ஆந்திர அரசு ஆண்டுதோறும் சிறந்த தெலுங்கு படங்கள், சிறந்த நடிகர்-நடிகைகள் மற்றும் சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நந்தி விருதுகள் வழங்கி வருகிறது. திரைப்படத்துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு என்.டி.ஆர் பெயரில் தேசிய விருதுகளும் வழங்குகிறது. கடந்த 3 ஆண்டுகளாக இந்த விருதுகள் வழங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் 2014, 2015, 2016 ஆகிய ஆண்டுகளுக்கான நந்தி விருதுகளை ஆந்திர அரசு நேற்று அறிவித்தது. இதில் 2014-ம் ஆண்டுக்கான என்.டி.ஆர் தேசிய விருதுக்கு நடிகர் கமல்ஹாசனும், 2016-ம் ஆண்டுக்கான என்.டி.ஆர் தேசிய விருதுக்கு நடிகர் ரஜினிகாந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

2015-ம் ஆண்டுக்கான என்.டி.ஆர் விருது டைரக்டர் ராகவேந்திரராவுக்கு வழங்கப்படுகிறது. 2014-ம் ஆண்டு சிறந்த படத்துக்கான நந்தி விருதை லெஜண்ட் பெற்றுள்ளது. மனம் படத்துக்கு இரண்டாவது பரிசு கிடைத்துள்ளது. சிறந்த நடிகருக்கான விருது லெஜண்ட் படத்தில் நடித்த பாலகிருஷ்ணாவும், சிறந்த நடிகைக்கான விருதை கீதாஞ்சலி படத்தில் நடித்த அஞ்சலியும் பெற்றுள்ளனர். சிறந்த இயக்குனருக்கான விருது பொயப்பட்டி சீனிவாசுக்கு கிடைத்துள்ளது. சிறந்த துணை நடிகர் விருது நாகசைதன்யாவுக்கும், துணை நடிகை விருது லட்சுமி மஞ்சுவுக்கும், சிறந்த நகைச்சுவை நடிகர் விருது பிரமாணந்தத்துக்கும், சிறந்த வில்லன் விருது ஜெகபதி பாபுவுக்கும் கிடைத்துள்ளது.

2015-ம் ஆண்டு நந்தி விருதுக்கான சிறந்த படமாக பாகுபலி தேர்வாகி உள்ளது. சிறந்த நடிகராக மகேஷ்பாபுவும், சிறந்த நடிகையாக சைஸ் ஜீரோ படத்தில் நடித்த அனுஷ்காவும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். சிறந்த இயக்குனர் விருது ராஜமவுலிக்கும், இசையமைப்பாளர் விருது கீரவாணிக்கும் கிடைத்துள்ளது. 2016-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகராக ஜூனியர் என்.டி.ஆரும், சிறந்த நடிகையாக ரீட்டுவர்மாவும் தேர்வாகி உள்ளனர். சிறந்த படத்துக்கான விருதுக்கு பெல்லி சூப்புலு தேர்வாகி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory