» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பச்சிளம் குழந்தையின் உயிரைக் காக்க, 516 கி.மீ. தூரத்தை 7 மணி நேரத்தில் கடந்த ஆம்புலன்ஸ்!!

வெள்ளி 17, நவம்பர் 2017 12:42:14 PM (IST)

கேரளாவில் பச்சிளம் குழந்தையின் உயிரைக் காக்க, 516 கி.மீ. தூரத்தை, ஆம்புலன்ஸ் ஒன்று 7 மணி நேரத்தில் கடந்து சென்று சாதனை படைத்துள்ளது.

கன்னூரில், புதன்கிழமை இரவு, பிறந்த ஒரு மாதமே ஆன பச்சிளம் குழந்தைக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக அந்த குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். எனவே தாமதிக்காமல் திருவனந்தபுரம் கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து மருத்துவமனையில் இருந்து பிறந்து 31 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையும், அதன் உறவினர்களும் ஆம்புலன்ஸில் பயணித்தனர். 

குழந்தையின் தாய், ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம், எவ்வளவு விரைவாக திருவனந்தபுரம் செல்ல முடியுமோ அவ்வளவு விரைவாக செல்ல வேண்டும் என்று கூறினார். கொஞ்சம் முன்கூட்டியே கொண்டு வந்திருந்தால் உயிர் பிழைத்திருக்கும் என்று பல தருணங்களில் மருத்துவர்கள் சொல்லியிருப்பார்கள். ஆனால் அந்த வார்த்தையை தற்பொழுது மருத்துவர்கள் சொல்லி விடக் கூடாது என்ற வைராக்கியத்துடன், கன்னூரில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனைக்கு பச்சிளம் குழந்தையை கொண்டு செல்ல, 516 கி.மீ. தூரத்தை 7 மணி நேரத்தில் கடந்து சென்றுள்ளார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தமீம்.

பொதுவாக இந்த தூரத்தை சாலை வழியாக கடக்க 14 மணி நேரம் ஆகும். 14ல் பாதியான 7 மணி நேரத்தில் இந்த தொலைவை கடந்து சாதனை படைத்த ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிகின்றன. இந்த 7 மணி நேரத்தில் ஒரு 15 நிமிடம் வாகன ஓட்டுநர் ஓய்வு எடுத்துள்ளார். அதைக் கழித்தால் வெறும் 6.45 மணி நேரம் மட்டுமே ஆம்புலன்ஸ் பயணித்துள்ளது. அப்படியென்றால், வாகனத்தின் சராசரி வேகம் மணிக்கு 76.4 கி.மீ.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd


Tirunelveli Business Directory