» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியீடு!!

வெள்ளி 17, நவம்பர் 2017 4:14:13 PM (IST)

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் 70 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் சமீபத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில், முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு, டிசம்பர் 9ம் தேதியும், இரண்டாம் கட்டமாக, 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 14ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 18ம் தேதி எண்ணப்படுகிறது.

இந்நிலையில் பாஜக தலைவைர் அமித் ஷா தலைமையிலான அக்கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திரமோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்திற்கு பின் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான, 70 பேர் கொண்ட பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. முதல்வர் விஜய் ரூபானி, துணை முதல்வர் நிதின் படேல் உள்ளிட்டோர் பெயர்கள் இதில் இடம் பெற்றுள்ளன. விஜய் ரூபானி ராஜ்கோட் தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd


Tirunelveli Business Directory