» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நாட்டுக்காக நேருவும், இந்திராவும் செய்த தியாகங்கள் புறக்கணிப்பு: மத்திய அரசு மீது சோனியா குற்றச்சாட்டு

திங்கள் 20, நவம்பர் 2017 5:48:25 PM (IST)

ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி சேவைகளை புறக்கணித்து, பாரதிய ஜனதா ஆணவத்துடன் செயல்படுகிறது என்று காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் சோனியா காந்தி பேசினார்.

டெல்லியில் இன்று நடந்த காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் சோனியா பேசினார். அவர் கூறியதாவது: இந்தியாவில் அதிகம் பேர் நேசிக்கும் ஒரே கட்சி காங்கிரஸ் கட்சிதான். மற்ற எந்த கட்சிகளையும் விட காங்கிரஸ் கட்சிக்கே அதிக வாக்கு வங்கி உள்ளது. காங்கிரசில் உள்ள சில அம்சங்களால் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து விட்டது. ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த நாள் முதல் பா.ஜ.க.வினரின் நடவடிக்கைகள் மிகவும் ஆணவமாக உள்ளன. நாட்டுக்காக ஜவகர்லால் நேருவும், இந்திரா காந்தியும் செய்த சேவைகள், தியாகங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. 

அவர்களது அரசியல் பணி மறைக்கப்படுகிறது. இதன் மூலம் வரலாற்றை மாற்றி அமைக்கும் முயற்சிகளில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளார். ஆனால் அவருக்கு இதில் வெற்றி கிடைக்கப்போவது இல்லை. பாராளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்று பதில் சொல்ல பிரதமர் மோடிக்கு துணிச்சல் இல்லை. இதனால்தான் அவர் பாராளுமன்ற கூட்டத் தொடர்களை எதிர்கொள்ள தயங்குகிறார்.வழக்கமாக குளிர்கால கூட்டத்தொடர் தேவையான அளவுக்கு நடைபெறும். ஆனால் தற்போது குளிர்கால கூட்டத்தொடரை ஒரு வாரத்தில் முடக்க பா.ஜ.க.வில் சதி நடக்கிறது. இதற்கு மக்களுக்கு பதில் சொல்லியே தீர வேண்டும்.இவ்வாறு சோனியா பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd






Tirunelveli Business Directory