» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

திரிபுராவில் பத்திரிகையாளரை துப்பாகியால் சுட்டுக்கொன்ற ஆயுதப்படை வீரர்

செவ்வாய் 21, நவம்பர் 2017 8:28:19 PM (IST)

திரிபுராவில் பத்திரிகையாளர் தன்னுடன் வாக்குவாதம் நடத்தியதால் கோபமடைந்த ஆயுதப் படை வீரர் அவரை சுட்டுக் கொன்றுள்ளார்.

திரிபுரா ராஷ்ட்ரிய ரைபிள் படையின் இரண்டாவது பட்டாலியன் கமாண்டரின் பாதுகாவலராக பணிபுரிபவர் தப்பான் டெபர்மா. இவரைச் சந்திக்க ஸ்யந்தன் பத்திரிகா நாளிதழ் பத்திரிகையாளர் சுதிப் தத்தா பெளமிக் இன்று மதியம் போத்ஜங் நகரில் உள்ள ஆயுதப்படை வளாகத்திற்குச் சென்றுள்ளார்.இருவரும் சந்தித்தபோது கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தப்பானை மற்ற ஆயுதப்படை அதிகாரிகள் கட்டுப்படுத்தியுள்ளனர். 

இதனிடையே, நந்தா ரியாங் என்ற மற்றொரு ஆயுதப்படை வீரர் சுதீப்பை துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். உடனே மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதும் சுதீப் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்த சுதீப் தத்தாவிற்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். அவரது சகோதரர் தைனிக் சம்பத் என்ற நாளிதழின் பதிப்பாளரும் செய்தி ஆசிரியரும் ஆவார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory