» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

முதல்வர் எடப்பாடி அணிக்கே இரட்டை இலை சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி தீர்ப்பு

வியாழன் 23, நவம்பர் 2017 12:56:15 PM (IST)

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணிக்கே அதிமுக கட்சி பெயர் மற்றும் இரட்டை இலை சின்னம் என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக அம்மா அணி சார்பில் டிடிவி தினகரன் போட்டியிட்டார். அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் சார்பில் மதுசூதனன் போட்டியிட்டார். இரு பிரிவினரும் மாற்றி மாற்றி குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால், இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இது தொடர்பாக இரு அணிகளைச் சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதேபோல், தேர்தல் ஆணையத்திலும் லாரிகள் கொண்டு செல்லும் அளவுக்கு பிரமாணபத்திரங்களை தாக்கல் செய்தனர். பல மாதங்களாக விசாரணை நடத்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள். இன்று இறுதி அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று தகவல் வெளியாகவுள்ளது.

அண்மையில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியில் சின்னம் யாருக்கு என்ற விசாரணையை முடித்த தேர்தல் ஆணையம் ஆளும் முதலமைச்சர் தரப்புக்கு அதிக பிரதிநிதிகளின் ஆதரவு இருப்பதாகச் சொல்லி சின்னத்தை கொடுத்தது. குறுகிய காலத்தில் பீஹாரைச் முதல்வர் நிதிஷ்குமார் கட்சியின் சின்ன விவகாரத்தில் தேர்தல் ஆணையம் முடிவெடுத்துவிட்டது. ஆனால், இரட்டை இலை விவகாரத்தில் பல மாதங்களுக்குப்பிறகு இன்று முடிவு அறிவிக்கப்பட வாய்ப்பு உறுவாகியுள்ளது.

அதிமுகவின் இரு அணிகளின் இணைப்பு இரட்டை இலை சின்னம் ஒரு முக்கிய காரணம் என்றுதான் சொல்லவேண்டும். அணிகள் இணைந்த பிறகு, நீதிமன்றங்களிலிருந்து இது தொடர்பான மனுக்களையும், தேர்தல் ஆணையத்திடம் இருந்து பிரமாண பத்திரங்களை திரும்ப பெறுவது என முடிவெடுக்கப்பட்டது. ஆனால், இவை எளிதில் நடந்துவிடவில்லை.

இப்போதைய தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை திரும்ப பெற்றார். ஆனால், தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்கப்பட்ட பல ஆயிரம் பக்க பிரமாண பத்திரங்களை திரும்ப பெற இரு அணிகளும் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தது. இரு தரப்பினரும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை எழுத்துப்பூர்வமாக முன்வைத்துள்ள நிலையில், சின்னம் தங்களுக்குத்தான் கிடைக்கும் என இரு தரப்பினரும் நம்பிக்கையுடன் சொல்லிவருகின்றனர். இந்நிலையில் அதிமுகவில் அதிகாரப்பூர்வமாக இருக்கும் இரு அணிகளின் சண்டைக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று தெரிகிறது. கட்சியின் பெயரும், சின்னமும் யாருக்கு என்பதை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கும் என்று தெரிகிறது.


மக்கள் கருத்து

சாமிNov 23, 2017 - 05:04:09 PM | Posted IP 117.2*****

அது சரியல்ல மிஸ்டர் - சூரியனின் சூடு மக்களுக்கு பிடிக்காது

M.RamanathaboopathiNov 23, 2017 - 02:26:23 PM | Posted IP 103.3*****

இனி இந்த சின்னம் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன? ஜெயலலிதாவோடு அந்த பிரபல சின்னமும் போய் விட்டது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory