» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டெல்லியின் காற்றுமாசு படிப்படியாகக் குறைகிறது: ஒக்கி புயலுக்கு நன்றி கூறும் தலைநகர் மக்கள்!!

வியாழன் 7, டிசம்பர் 2017 4:16:21 PM (IST)

தமிழகம், கேரளா, லட்சத் தீவுகளை சூறையாடி பலத்த சேதத்தை ஏற்படுத்திச் சென்ற ஒக்கி புயலால் தலைநகர் புது டெல்லியில் காற்று மாசு குறைந்துள்ளது. 

புது டெல்லியின் காற்று மாசு எனப்படும் மிகப்பெரிய பிரச்னையை ஒக்கி புயலானது ஒன்றும் இல்லாமல் செய்துள்ளது. அதாவது காற்றின் தரம் மிக மிக மோசம் என்ற இடத்தில் இருந்து மிக மோசம் மற்றும் மோசம் என்ற தரத்துக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் இது குறித்துக் கூறுகையில், ஒவ்வொரு மணி நேரத்துக்கும் காற்றின் தரம் உயர்ந்து வருகிறது. இது தொடரும் என்று எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நிலவிய மிக மோசமான காற்று மாசு காரணமாக இதுவரை காற்றின் நகர்வு வேகம் மோசமாக இருந்தது. ஆனால், தற்போது, வடக்கில் இருந்து காற்று தெற்கு நோக்கி இனி எளிதாக நகரும் என்றும் அவர் தெரிவித்தார். காற்று மாசுபாட்டால் பல இன்னல்களுக்கு ஆளாகி வந்த டெல்லிவாசிகள் ஒக்கி புயலுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். வடக்கு இந்திய மாநிலங்களில் ஏற்பட்டிருக்கும் காற்று மாசுபாட்டினை, ஒக்கி புயல் சரி செய்துவிடும் என்று நாசா எர்த் இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் டெல்லி காற்றின் தரம் மிக மோசம் என்ற அளவில் பதிவாகியிருந்த நிலையில், டெல்லியில் காற்றில் உள்ள பி.எம். 2.5, பி.எம். 10 நுண்மாசுத் துகள்களின் அளவு அதிகரித்திருந்ததாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இது குறித்து கூறப்பட்டதாவது, காற்றின் தரக் குறியீடு கடந்த வாரம் 303 (மைக்ரோகிராம்/மீட்டர் கியூப்) ஆகப் பதிவாகியிருந்தது.  முந்தைய நாள்களைவிட காற்றில் உள்ள பி.எம் 2.5, பி.எம் 10 நுண்மாசுத் துகள்களின் அளவு அதிகரித்தது. பி.எம் 10 இன் அளவு 335- ஆகவும் ( மைக்ரோ கிராம்/ கியூபிக் மீட்டர்) பி.எம் 2.5 நுண் மாசுத்துகள்களின் அளவு 201-ஆகவும் பதிவாகியிருந்தது. 

நகரில் காற்றின் வேகம் அதிகமாகக் காணப்படுவதால் நுண் மாசுத் துகள்கள் இலகுவாக பரவக் கூடியதாக இருந்தது. வானம் தெளிவாகக் காணப்படுவதுடன் போதிய சூரிய வெளிச்சம் காணப்படுவதால் இந்த நுண்துகள்கள் அதிகளவு உயரத்திற்குப் பரவவும் காரணமாக இருந்தன. டெல்லி தொழில்நுட்பப் பல்கலைக் கழகம் அமைந்துள்ள பகுதியில் கடந்தவாரம் புதன்கிழமை டெல்லியில் மிக மோசமான காற்றின் தரக் குறியீடு பதிவானது. அத்துடன் இப்பகுதியில் பி.எம் 2.5 நுண் மாசுத் துகளின் அளவு 497 ஆக இருந்தது. ஆனந்த் விஹார், ஆர்.கே.புரம் ஆகிய இடங்களிலும் காற்றின் தரம் மிக மோசம் என்ற நிலையிலேயே இருந்தது. இந்த நிலையில், தற்போது ஒக்கி புயல் காற்றால் டெல்லியின் காற்றுமாசு படிப்படியாகக் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads




Tirunelveli Business Directory