» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஹஜ் புனிதப்பயணம்... இந்திய ஒதுக்கீடு அதிகரிப்பு : மத்திய அமைச்சர் தகவல்!!

புதன் 10, ஜனவரி 2018 11:59:56 AM (IST)

இந்தியாவில் இருந்து இந்த ஆண்டு ஹஜ் புனிதப்பயணம் செல்வோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 75 ஆயிரத்து 25 என்ற அளவுக்கு உயரும். சுதந்திரத்துக்கு பின்னர் இவ்வளவு பேர் இந்தியாவில் இருந்து ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை.

இதற்கான ஒதுக்கீட்டை சவுதி அரேபிய அரசு செய்துள்ளது. மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வியும், சவுதி அரேபிய ஹஜ் மற்றும் உம்ரா மந்திரியும் ‘இரு தரப்பு வருடாந்திர ஹஜ்–2018’ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிலையில், இந்த ஒதுக்கீட்டை சவுதி அரேபிய அரசு செய்து உள்ளது.

இதுபற்றி மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறுகையில், ‘‘3 ஆண்டுகளுக்கு முன்னர் ஹஜ் புனிதப்பயண இந்திய ஒதுக்கீடு 1 லட்சத்து 36 ஆயிரத்து 20 ஆக இருந்தது. கடந்த 2 ஆண்டுகளில் அது சாதனை அளவாக 1 லட்சத்து 75 ஆயிரத்து 25 என்ற எண்ணிக்கையாக உயர்ந்து உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு வளர்ந்து வருவதும், சவுதி அரேபியா மற்றும் பிற அரபு நாடுகளுடனான இந்தியாவின் உறவு இணக்கமானதாக அமைந்துள்ளதும்தான் இந்த உயர்வுக்கு காரணம்’’ என்று குறிப்பிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory