» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

திருட்டு வழக்கில் கைதான கோடீஸ்வரர்: சிறையில் லாலுவுக்கு உதவ தொண்டர்கள் பலே ஐடியா?!!

புதன் 10, ஜனவரி 2018 3:36:09 PM (IST)

கால்நடைத் தீவன வழக்கில் தண்டனை பெற்று ராஞ்சியின் பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பிகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் தொண்டர்கள் ஒரு விநோதமான செயலை செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

லாலு பிரசாத் கடந்த வாரம், கால்நடைத் தீவன வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். அன்றைய தினமே, ராஞ்சியை சேர்ந்த சுமித் யாதவ் என்பவரிடம் இருந்து ரூ.10 ஆயிரத்தை திருடியதாகக் கொடுக்கப்பட்ட புகாரில் லாலுவின் தொண்டர்கள் மதன் யாதவும், லஷ்மன் யாதவும் சரண் அடைந்தனர். குற்றம்சாட்டப்பட்ட இருவரும் லாலு பிரசாத் அடைக்கப்பட்டிருக்கும் சிறையிலேயே அடைக்கப்பட்டனர்.

ஆனால், பணத்தைத் திருடியதாக சரணடைந்த இரண்டு பேரில் மதன் யாதவ், வசதியானவர் என்பதும், இரண்டு மாட்டுப் பண்ணைகள், பெரிய வீடு, எஸ்யூவி கார் வைத்திருப்பதும் தெரிய வந்துள்ளது. திருட்டில் மதன் யாதவுக்கு உதவியதாக லஷ்மண் மீது புகார் பதிவு செய்யப்பட்டது. இருவரும் சிறையில் அடைக்கப்பட்டதும், லாலு யாதவுக்கு உதவி செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டதில், இருவரும் லாலுவின் உதவியாளர்களா என்று விசாரித்ததில், அவர்கள் உதவியாளர்கள் இல்லை என்றும், ராஷ்ட்ரிய ஜனதா தள தொண்டர்கள் என்றும் கூறியுள்ளனர்.

ஆனால், இவர்கள் லாலு பிரசாத் யாதவ் சிறையில் அடைக்கப்பட்ட அதே தினத்தில் சரண் அடைந்திருப்பதும், அதே சிறையில் அடைக்கப்பட்டிருப்பதும் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இது குறித்து விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மதன் யாதவ் குறித்து, அவரது ஊர் மக்கள் கூறுகையில், திடீரென மதன் எங்கே போனார் என்று தெரியவில்லை. பிறகுதான் அவர் சிறையில் இருப்பது தெரிய வந்தது. மதன் வசதியானவர். அவர் பணத்தைத் திருடிய வழக்கில் கைதாகியிருப்பது எங்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது என்கிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads




Tirunelveli Business Directory