» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்து என்பது மதம் அல்ல, வாழ்வியல் நெறி: துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பேட்டி

வியாழன் 11, ஜனவரி 2018 11:38:44 AM (IST)இந்து என்பது மதம் அல்ல, வாழ்வியல் நெறி என இந்திய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துணை குடியரசுத் தலைவர்   வெங்கையா நாயுடு இன்று சாமி தரிசனம் செய்தார். இதற்காக நேற்று டெல்லியில் இருந்து புறப்பட்டு திருப்பதி வந்தார்.  இன்று அதிகாலை ஏழுமலையான் கோவிலில் சுப்ரபாத தரிசனத்தின்போது அவர் சுவாமியை வழிபாடு செய்தார். ஏழுமலையான் தரிசனம் முடித்த அவர் கோவிலில் வைத்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது நாம் பின்பற்றும் இந்து என்பது மதம் அல்ல. அது எப்போதுமே மதமாக இருந்ததில்லை. இந்து என்பது ஒரு வாழ்வியல் நெறி, இந்து என்பது நாம் எப்படி வாழ வேண்டும் என்று கற்றுக் கொடுப்பதாக என்று குறிப்பிட்டார். முக்கிய பிரமுகர்கள் அடிக்கடி கோயிலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். சாதாரண பக்தர்களும் தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக, கோயிலுக்கு செல்வதை தான் குறைத்துக் கொண்டதாகவும் அவர் கூறினார். வெங்கையா நாயுடு வருகையையொட்டி திருப்பதி மற்றும் திருமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory