» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இஸ்ரோவின் 100வது செயற்கைக்கோள்: பிஎஸ்எல்வி சி-40 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!

வெள்ளி 12, ஜனவரி 2018 12:04:46 PM (IST)ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று காலை 9.28 மணிக்கு பிஎஸ்எல்வி சி-40 ராக்கெட் விண்ணில் ஏவியது இஸ்ரோ.

இந்த ராக்கெட் இந்தியாவின் கார்டோசாட் 2 வரிசை செயற்கைக்கோள்களுடன், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 30 மைக்ரோ மற்றும் நானோ செயற்கைக்கோள்களை முதலாவது ஏவுதளத்தில் இருந்து சுமந்து செல்கிறது. இந்த ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 28 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று வியாழக்கிழமை அதிகாலை 5.29 மணிக்கு தொடங்கியது.

இந்தியா சார்பில் 710 கிலோ எடை கொண்ட கார்டோசாட்-2 செயற்கைக்கோள், 100 கிலோ எடை கொண்ட மைக்ரோ சாட்டிலைட் மற்றும் 5 கிலோ எடை கொண்ட மிகச் சிறிய நானோ செயற்கைக் கோள்களையும் இஸ்ரோ இன்று வெள்ளிக்கிழமை (ஜன.12) தனது 100வது செயற்கைகோளை விண்ணுக்கு ஏவியது. கார்டோசாட் 2 வரிசை செயற்கைக்கோள் எல்லைப் பகுதியைக் கண்காணிப்பதற்கும் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்துவதற்கு தேவையான துல்லியமான தகவல்கள், அண்டை நாடுகளின் எல்லைப் பகுதிகளில் டாங்குகள் உள்ளிட்டவற்றின் நடமாட்டம் போன்ற தகவல்களை அறிய உதவும்.

கடந்த 2005 -ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதி பிஎஸ்எல்வி சி-6 ராக்கெட்டில் முதல் கார்டோ சாட்-1 செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. அதையடுத்து பிஎஸ்எல்வி சி-7, பிஎஸ்எல்வி சி-9, பிஎஸ்எல்வி சி-15, பிஎஸ்எல்வி சி-34 உள்ளிட்ட ராக்கெட்டுகளில் கார்டோ சாட் வகை செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

உண்மைJan 12, 2018 - 06:14:16 PM | Posted IP 122.1*****

ஜெய் ஸ்ரீ ஹரி! ஜெய் ஹிந்த்!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory