» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிரச்சனையில் பிரதமர் மோடி தலையிட வேண்டும்: சுப்பிரமணியன் சாமி கருத்து!

வெள்ளி 12, ஜனவரி 2018 4:53:33 PM (IST)

உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிரச்சனையில் பிரதமர் மோடி நேரடியாக தலையிட வேண்டும் என சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது சக மூத்த நீதிபதிகள் சரமாரி குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். நாட்டில் முதல்முறையாக இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. நீதிபதிகளின் புகார் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியன் சாமி நீதிபதிகளின் பிரச்சனையில் பிரதமர் மோடி நேரடியாக தலையிட வேண்டும் வலியுறுத்தியுள்ளார். நீதிபதிகள் தங்களின் கடமையை செய்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் நீதிபதிகள் எழுப்பிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் முக்கியமானவை என்றும் சுப்பிரமணியன் சாமி தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads




Tirunelveli Business Directory