» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது பரபரப்பு புகார் எதிரொலி: சட்ட அமைச்சருடன் பிரதமர் ஆலோசனை

வெள்ளி 12, ஜனவரி 2018 5:07:29 PM (IST)

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது 4 மூத்த நீதிபதிகள் பரபரப்பு புகார் எதிரொலியாக  சட்ட அமைச்சருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் முதன்முறையாக இன்று செய்தியாளர்களை சந்தித்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது பரபரப்பு பகீர் குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். தலைமை நீதிபதி முடிவுகளை தன்னிச்சையாகவே எடுக்கிறார் என்றும் மற்ற நீதிபதிகளை கலந்து ஆலோசிப்பதில்லை என்றும் நீதித்துறைக்கு எங்களைபோன்ற மூத்த நீதிபதிகளே பொறுப்பானவர்கள் என்பது எங்கள் கருத்து என்று தெரிவித்தனர். 

மேலும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்வது குறித்து நாடு தான் சிந்திக்க வேண்டும் என்று தெரிவித்தனர். நாங்கள் கொடுத்த  கடிதத்தின் பிரதிகளை ஊடகங்களுக்கு கொடுக்கிறோம். அந்த கடிதத்தில் அனைத்து விவரங்களும் உள்ளன.  எங்களுக்காக மட்டுமே நாங்கள் இப்போது பேசினோம் என உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் கூறினார். எங்களது கவலைகளை நாட்டு மக்களுக்குத் தெரிவிக்கவும், உச்சநீதிமன்றத்தை பாதுகாப்பது குறித்து நாட்டு மக்களே முடிவு செய்ய வேண்டும் என நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறினார். 

நீதிபதிகள் செய்தியாளர்களை சந்திப்பதையொட்டி உச்சநீதிமன்றத்தின் அனைத்து அமர்வுகளும் வழக்கு விசாரணையை முடித்து கொண்டுள்ளன. உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் இப்படி தலைமை நீதிபதி மீது பரபரப்பு குற்றச்சாட்டைக் கூறியிருப்பது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் ஆலோசனை நடத்தி வருகிறார் என தகவல் வெளியாகி உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory