» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மகாராஷ்டிராவில் 7 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம்: கடலோர காவல்படை தேடுதல் வேட்டை

சனி 13, ஜனவரி 2018 5:29:31 PM (IST)



மகாராஷ்டிராவில் 7 பேருடன் சென்ற பவான் ஹன்ஸ் ரக ஹெலிகாப்டர் ஒன்று மும்பை கடலோர பகுதியில் மாயம் ஆனது.

மகாராஷ்டிராவில் ஜுஹு விமான நிலையத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் 5 பணியாளர்கள் மற்றும் 2 விமானிகளுடன் ஹெலிகாப்டர் ஒன்று இன்று புறப்பட்டு சென்றது. அந்த ஹெலிகாப்டர் எண்ணெய் நிறுவனத்தின் விமான கட்டுப்பாட்டு அறையுடன் காலை 10.30 மணிவரை தொடர்பில் இருந்தது. அதன்பின் அவர்கள் எந்த தொடர்பிலும் இல்லை. இதனை தொடர்ந்து இந்திய கடலோர காவல்படையினருக்கு எண்ணெய் நிறுவனம் தகவல் தெரிவித்தது. அவர்கள் தேடுதல் மற்றும் மீட்பு பணியை தொடங்க உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Tirunelveli Business Directory