» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆன்மிகப் பயணமாகவே இமயமலை வந்துள்ளேன், அரசியலுக்கு இங்கு இடமில்லை: ரஜினிகாந்த் பேட்டி

செவ்வாய் 13, மார்ச் 2018 4:00:05 PM (IST)

ஆன்மிகப் பயணமாக இமயமலை வந்து உள்ளேன், அரசியல் பயணம் இல்லை என ரஜினிகாந்த் கூறிஉள்ளார். 

அரசியலுக்கு வந்துவிட்டதாக கூறும் ரஜினிகாந்த் முக்கிய விவகாரம் தொடர்பாக தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவிக்க மறுக்கிறார் என குற்றம் சாட்டப்படுகிறது. இதனை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று விமர்சனம் செய்தார். கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், காவிரி மேலாண்மை வாரிய விவகாரம் தொடர்பான கேள்விகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் பதில் தெரிவிக்க மறுக்கிறாரே என கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்து பேசிய கமல்ஹாசன், "ரஜினிகாந்த் இதுமட்டும் அல்ல பல்வேறு விஷயங்களில் அப்படிதான் இருக்கிறார்,” என்று கூறினார். ரஜினிகாந்த் இப்போது இமயமலையில் பயணம் மேற்கொண்டு உள்ளார். இன்று டேராடூன் வந்த அவரிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுத்தனர். அப்போது அவர் பேசுகையில், இப்போது ஆன்மிகப் பயணமாக இமயமலை வந்து உள்ளேன். நான் ஒரு யாத்ரீகராக இங்கு வந்து உள்ளேன். இதில் அரசியல் பேசுவதற்கு எதுவும் கிடையாது. இப்போதுதான் அமிதாப்பச்சன் உடல்நிலைக்குறைவு தொடர்பாக தகவல் கிடைத்தது, அவர் விரைவில் நலம்பெற பிரார்த்திக்கிறேன் என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory