» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டெல்லியில் சோனியாகாந்தி வீட்டில் எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு விருந்து

செவ்வாய் 13, மார்ச் 2018 8:23:09 PM (IST)

சோனியா காந்தி வீட்டில் எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது.

இந்திய பாராளுமன்ற தேர்தலுக்கு கிட்டத்திட்ட ஒன்றே கால் ஆண்டுகள் உள்ள நிலையில் பாஜக,வை வீழ்த்த எதிர்கட்சிகளுக்கு சோனியாகாந்தி அழைப்பு விடுத்திருந்தார். இன்று இரவு (மார்ச் 13) டெல்லியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி வீட்டில் திரிணாமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது.

இந்த விருந்தில் எம்.பி.க்கள் கனிமொழி, கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.வந்த அனைவரையும் சோனியாகாந்தி வரவேற்றார்.இதில் அரசியல் நிலவரம்,தேர்தலை எதிர்காெள்வது உள்ளிட்ட பல விஷயங்கள் பேசப்பட்டதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Tirunelveli Business Directory