» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வெளிநாட்டு வக்கீல்கள் இந்தியாவில் தொழில் செய்ய முடியாது : உச்சநீதிமன்றம் உத்தரவு

புதன் 14, மார்ச் 2018 10:47:15 AM (IST)

வெளிநாட்டு வக்கீல்கள் இந்தியாவுக்கு வந்து, வக்கீல் தொழில் செய்ய முடியாது என உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

வெளிநாட்டு வக்கீல்கள் இந்தியாவுக்கு வந்து, வக்கீல் தொழில் செய்ய முடியாது. இதே போன்று வெளிநாட்டு சட்ட நிறுவனங்களின் சார்பில் இந்தியாவுக்கு வந்து சட்ட சேவைகள் வழங்க முடியாது. இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட சட்ட நிறுவனங்களின் வாதங்களை கேட்டறிந்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏ.கே.கோயல், யு.யு.லலித் இதற்கான உத்தரவை நேற்று பிறப்பித்தனர்.

மேலும் வெளிநாட்டு வக்கீல்கள் இந்தியாவுக்கு வந்து இங்கு உள்ள நீதிமன்றங்களில் வெளிநாட்டு சட்ட வழக்குகளில், சர்வதேச சட்ட விவகாரங்களில் ஆஜராகி விட்டு, திரும்ப செல்வதற்கு அனுமதி வழங்கி சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாற்றி அமைத்தனர். தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த சேவைகளை வழங்கும் பி.பி.ஓ. (அயலக சேவை வழங்கல்), இந்தியாவில் சட்ட தொழிலை நிர்வகிக்கும் சட்டங்களின் வரம்புக்குள் வரவில்லை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory