» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வங்கிகளில் கடனை திருப்பிச் செலுத்தாதவர்களை அசிங்கப்படுத்த வேண்டும்: மத்திய அரசு உத்தரவு

புதன் 14, மார்ச் 2018 11:01:46 AM (IST)

வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு வேண்டுமென்றே கடனை திருப்பிச் செலுத்தாதவர்களின் புகைப்படத்தை வெளியிட்டு அசிங்கப்படுத்த வேண்டும் என வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு, வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, வேண்டுமென்றே கடனை திருப்பிச் செலுத்தாதவர்களின் புகைப் படங்களையும், இதர விவரங்களையும் பத்திரிகைகளில் வெளியிட்டு அசிங்கப்படுத்துமாறு அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கும் மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

வங்கியின் இயக்குனர்கள் குழு ஒப்புதலுடன் இதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு வங்கிகளுக்கு எழுதிய கடிதத்தில் மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது. கடனை திருப்பிச் செலுத்தும் திறன் இருந்தும், செலுத்தாதவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டி விட்டதாகவும், இதில் சம்பந்தப்பட்ட தொகை ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 50 கோடி என்றும் மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.


மக்கள் கருத்து

ஒருவன்Mar 14, 2018 - 12:41:20 PM | Posted IP 59.89*****

போடா உங்க சட்டம் , இன்னும் கிங் பிஷர் பீர் கம்பெனி பொம்பிளை பொருக்கி விஜய் முல்லையா வெளிநாட்டுல சந்தோசமாக ஊர் சுற்றிடு இருக்கான் ... அதுல என்ன நடிவடிக்கை எடுத்தது ???? பணக்காரர்களுக்கு மட்டும் ஒரு சட்டம் , ஏழைக்கு மட்டும் இன்னொரு சட்டமா? சட்டம் தான் அசிங்கம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory