» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய மே 2-ம் தேதி வரை தடை நீட்டிப்பு : சிபிஐ நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 16, ஏப்ரல் 2018 12:23:31 PM (IST)
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறைக்கு விதிக்கப்பட்ட தடை மே 2-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஓ.பி.ஷைனி, கார்த்தி சிதம்பத்துக்கு முன்ஜாமீன் வழங்கினார். ஏப்ரல் 16ம் தேதி வரை கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டார். இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை மே 2-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி ஓ.பி.ஷைனி உத்தரவிட்டார். வழக்கு விசாரணையும் அன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. கார்த்தி சிதம்பரம் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் 27-ம் தேதி விசாரணைக்கு வருவதால் அவரை கைது செய்ய தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில், கார்த்தி சிதம்பரத்தை, வரும் 27-ஆம் தேதி வரை கைது செய்வதற்குத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உத்தரபிரதேச அரசின் பசு பாதுகாப்பு பிரசார தூதராக நடிகை ஹேமமாலினி நியமனம்
சனி 23, பிப்ரவரி 2019 4:56:28 PM (IST)

வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து விவாதம் நடத்த மோடி தயாரா?: ராகுல் சவால்
சனி 23, பிப்ரவரி 2019 3:50:30 PM (IST)

பெங்களூரில் ஏரோ இந்தியா கண்காட்சியில் தீ விபத்து : 100 கார்கள் சேதம்
சனி 23, பிப்ரவரி 2019 2:15:01 PM (IST)

மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் ராமர் கோயில் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் உறுதி
சனி 23, பிப்ரவரி 2019 8:45:45 AM (IST)

புல்வாமா தாக்குதல் நடந்தபோது பிரதமர் மோடி படப்பிடிப்பில் பிஸியாக இருந்தார் : காங்கிரஸ் சாடல்
வெள்ளி 22, பிப்ரவரி 2019 10:20:04 AM (IST)

வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆன்லைன் மூலம் வாக்களிக்க முடியாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்
வெள்ளி 22, பிப்ரவரி 2019 10:09:19 AM (IST)
