» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
காவிரி விவகாரத்தில் பாஜகவால் கர்நாடகாவுக்கு பாதிப்பு ஏற்படாது: முரளிதர் ராவ் பேட்டி
திங்கள் 16, ஏப்ரல் 2018 5:44:59 PM (IST)
காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பா.ஜ.க. செயல்படாது என பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் முரளிதர் ராவ் கூறினார்.

கர்நாடக தேர்தலை கருத்தில் கொண்டு பா.ஜ.க. காய்நகர்த்தி வருவதாகவும், காவிரி பிரச்சினையை இழுத்தடிப்பதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் முரளிதர் ராவ் இன்று பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் பா.ஜ.க.வின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருப்பதாக தெரிவித்தார்.
‘காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் பா.ஜ.க.வின் பங்கு பெரிய அளவில் உள்ளது. இந்த விவகாரத்தில் கர்நாடகாவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பா.ஜ.க. செயல்படாது. இதுகுறித்து கர்நாடக தேர்தல் அறிக்கையிலும் வெளியிடுவோம்’ என்றார். இதையடுத்து கர்நாடகாவுக்கு ஆதரவாக முரளிதர ராவ் பேசியது தமிழக விவசாயிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வங்கி கணக்குடன் ‘ஆதார்’ இணைப்பது கட்டாயம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
ஞாயிறு 22, ஏப்ரல் 2018 9:36:43 AM (IST)

புது டெல்லி பகீரத் பேலஸ் பகுதியில் தீ விபத்து : 4 மணி நேரத்திற்கு பின்னர் அணைப்பு
சனி 21, ஏப்ரல் 2018 7:57:18 PM (IST)

பணமதிப்பிழப்புக்குப் பின் கள்ள நோட்டு புழக்கம் அதிகரிப்பு: புலனாய்வுப் பிரிவு திடுக்கிடும் தகவல்
சனி 21, ஏப்ரல் 2018 5:34:14 PM (IST)

தமிழகத்தை போல ஆந்திராவை மத்திய அரசு கட்டுப்படுத்த முடியாது: சந்திரபாபு நாயுடு
சனி 21, ஏப்ரல் 2018 5:23:00 PM (IST)

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை: சட்ட திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
சனி 21, ஏப்ரல் 2018 4:33:59 PM (IST)

இந்தியாவின் பிரச்சனைகள் குறித்து வெளிநாட்டில் பேசுவது ஏன்? மோடி மீது சிவசேனா பாய்ச்சல்!!
சனி 21, ஏப்ரல் 2018 3:31:56 PM (IST)
