» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வரதட்சணை கொடூரம் : மனைவியை கட்டிவைத்து பல மணி நேரம் பெல்ட்டால் அடித்த கணவன்

செவ்வாய் 17, ஏப்ரல் 2018 10:52:51 AM (IST)

உத்தரபிரதேசத்தில் வரதட்சணை கேட்டு மனைவியை கணவர் கட்டி தொங்கவிட்டு தொடர்ந்து 4 மணி நேரம் பெல்ட்டால் அடித்து துன்புறுத்திய கொடூர சம்பவம் நடந்துள்ளது. 

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் இளைஞர் ஒருவர் தனது மனைவியிடம் பிறந்த வீட்டிற்கு சென்று வரதசட்சனையாக ரூ.50,000 வாங்கி வருமாறு கூறி கொடுமை படுத்தி உள்ளார். அவரது மனைவி மறுக்கவே ஒரு கட்டத்தில் மனைவி என்று கூட பார்க்காமல் கையை துப்பட்டாவின் ஒரு முனையால் கட்டி, மறுமுனையை வீட்டின் மேல் சுவரில் கட்டி தொங்கவிட்டுள்ளார். பின்னர் தனது பெல்ட்டால் மனைவியை தொடர்ந்து 4 மணி நேரம் அடித்துள்ளார். 

மனைவி வலி தாங்காமல் கதறி அழுதுள்ளார், இறக்கமில்லாத அந்த கொடூரன் அடிப்பதை நிறுத்தவில்லை. மனைவி சுயநினைவு இழக்கும் வரை அடித்து உள்ளார். இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து, அந்த பெண்ணின் சகோதருக்கு அனுப்பி உள்ளார். அத்துடன் வரதட்சனை பணத்தை கொடுக்கவில்லை என்றால், இந்த தாக்குதல் சம்பவம் தொடரும் என்று பகிரங்கமாக மிரட்டி உள்ளார்.  இதனையடுத்து பெண் வீட்டார் அடிப்படையில் அந்த கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், நான் சுயநினைவு இழக்கும் வரை என்னை  கணவர் பெல்ட்டால்  அடித்து துன்புறுத்தினார். பின்னர் நான் மயங்கிவிழுந்விட்டு விட்டேன். மயக்கம் தெளிந்து பார்த்த போது எனது கைகள் கட்டப்பட்டு தொங்கிக்கொண்டிருந்தேன் என கண்ணீர் மல்க கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory