» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மக்களை வேவு பார்க்க செட்-டாப் பாக்ஸ் கருவியில் சிப் பொருத்த திட்டம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

செவ்வாய் 17, ஏப்ரல் 2018 11:06:58 AM (IST)

செட்-டாப் பாக்ஸ் கருவியில் சிப் பொருத்துவது, நாட்டு மக்களை வேவு பார்க்கும் மத்திய அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. 

மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகமானது, தொலைக்காட்சியில் மக்கள் எந்த நிகழ்ச்சியை அதிக நேரம் காண்கிறார்கள் என்பதை அறிவதற்காக, புதிய தொலைக்காட்சியின் செட்- டாப் பாக்ஸ் கருவியில் சிப் பொருத்துவது தொடர்பான திட்டத்தை முன்வைத்துள்ளது. 

இதுகுறித்து அந்த அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ஒவ்வொரு தொலைக்காட்சியையும் எவ்வளவு பேர் காண்கிறார்கள் என்பதை அதிகாரப்பூர்வமாக ஊர்ஜிதப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இந்தத் திட்டமானது, விளம்பரதாரர்கள், விளம்பர இயக்குநரகம் ஆகியவைகளுக்கு, எந்தத் தொலைக்காட்சியில் விளம்பரம் செய்யலாம் என்பது தொடர்பான முடிவை எடுக்க உதவியாக இருக்கும் என்றார். 

இந்நிலையில், மத்திய அரசு முன்வைத்துள்ள இந்தத் திட்டத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக சுட்டுரையில் அக்கட்சியின் மக்கள் தொடர்புப் பிரிவு துறை தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா வெளியிட்டுள்ள பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: நாட்டு மக்களை வேவு பார்க்கும் மத்திய அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை வெட்டவெளிச்சமாகியுள்ளது. 

தனிநபர் ரகசியத்தில் தலையிடும் நடவடிக்கையாக, 4 சுவர்களைக் கொண்ட படுக்கை அறைகளில், தொலைக்காட்சி பெட்டிகளில் எந்த நிகழ்ச்சியை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்கு மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி விரும்புகிறார். மத்தியில் ஆளும் மோடி அரசானது, வேவு பார்க்கும் அரசாகும். மத்திய அரசானது, தனிநபர் ரகசியம் தொடர்பான உரிமையை சுக்குநூறாக்கி விட்டது என்று ரன்தீப் சுர்ஜேவாலா குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து

makkalApr 18, 2018 - 11:34:28 AM | Posted IP 162.1*****

god

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Tirunelveli Business Directory