» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஐபிஎல் போட்டியைக் காண புனேவுக்கு சிறப்பு ரயிலில் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள்

வியாழன் 19, ஏப்ரல் 2018 3:34:21 PM (IST)புனேவில் நடக்கும் ஐபிஎல் போட்டியை காண்பதற்காக சிஎஸ்கே ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் சிறப்பு ரயிலில்  புனே சென்றுள்ளனர். 

சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்த ஒருசில அரசியல் கட்சிகளும் திரையுலகினர்களும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால், சமீபத்தில் சென்னை போட்டிகளை புனே மைதானத்திற்கு மாற்ற ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்தது. இந்நிலையில் நாளை புனேவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதவுள்ளது. இந்த போட்டியை காண  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் சுமார் ஆயிரம் பேர் சிறப்பு ரயிலில் புனேவுக்கு பயணம் செய்தனர். 

இதற்காக அவர்கள் ரயில்வே நிர்வாகத்திடம் பேசி சிறப்பு ரயிலுக்கு ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் சென்னை அணி ரசிகர்கள் மன்றம் ஏற்பாடு செய்த ரயிலில் சென்னை சிஎஸ்கே ரசிகர்கள் சிஎஸ்கே அணியின் மஞ்சள் உடையுடன் ரயிலில் சென்றுள்ளனர். சிஎஸ்கே போட்டியை பார்க்க பலநூறு மைல்கள் கடந்து செல்லும் தீவிர ரசிகர்கள் இருக்கும் வரை ஐபிஎல் போட்டியின் முக்கியத்துவத்தை யாராலும் குறைக்க முடியாது என்று கூறப்படுகிறது.


மக்கள் கருத்து

மக்கள்Apr 20, 2018 - 03:21:58 PM | Posted IP 141.1*****

இந்த ஆர்வத்தை அணை கட்ட காட்டியிருக்கலாம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd

Tirunelveli Business Directory