» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

வெள்ளி 20, ஏப்ரல் 2018 11:02:00 AM (IST)

இந்தியாவில் ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் ஒரு சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளாகி வருவதாக  ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

காஷ்மீர், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சிறுமிகள் கற்பழிக்கப்பட்ட விவகாரம் சமீபத்தில் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சூழலில் இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து, குழந்தைகளின் உரிமைக்கான தான்னார்வ அமைப்பான ‘க்ரை’ நிறுவனம் ஆய்வு நடத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

இதில் கடந்த 10 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 500 சதவீதம் அதிகரித்து இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. அதாவது கடந்த 2006–ம் ஆண்டு 18,967 என இருந்த மேற்படி குற்ற செயல்கள், கடந்த 2016–ல் 1,06,958 என உயர்ந்து இருக்கிறது.கடந்த 2016–ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி நாட்டின் ஒட்டுமொத்த குற்றங்களில் மூன்றில் ஒரு பங்கு, குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவானவை ஆகும். அந்தவகையில் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளாகும் அதிர்ச்சி நிலவரம் தெரியவந்துள்ளது.

இதைப்போல குழந்தைகளுக்கு எதிராக பதிவாகி இருக்கும் மொத்த பாலியல் குற்றங்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவை, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மராட்டியம், டெல்லி மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களில் மட்டும் பதிவாகி இருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd

Tirunelveli Business Directory